எத்தனை சோதனைகள்; அவதூறுகள்.. மக்களுக்கு நன்றி.. உங்களுக்காக உழைப்பேன்.. ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு!
சென்னை: திமுகவை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார்.
Recommended Video
தமிழக மக்கள் நீண்ட காலம் எதிர்பார்த்து கொண்டிருந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

திமுக அபார வெற்றி
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரியணையில் அமர ஆயத்தமாகி விட்டது. இதுவரையிலான வாக்கு எண்ணிக்கையில் திமுக 88 இடங்களில் முன்னிலையும் 65 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. அதிமுக 58 இடங்களில் முன்னிலையும் 22 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது.

ஸ்டாலினுக்கு வாழ்த்து
தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையின் மொத்த தொகுதிகளையும் திமுக முழுவதுமாக கைப்பற்றி விட்டது. திமுகவின் வெற்றியால் அந்த கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மக்களுக்கு நன்றி
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திமுக தொண்டர்கள் யாரும் வெற்றியை கொண்டாடக் கூடாது என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் திமுகவை வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் வெல்லும்
எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள்? - வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி! ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். உங்களுக்காக உழைப்பேன்! உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி. தமிழகம் வெல்லும்! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications