சாத்தான்குளம் வழக்கு... கைது செய்ய நான் நினைவூட்ட வேண்டுமா..? -மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.
முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
''ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன''.
''கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு நான் நினைவூட்ட வேண்டுமா?''
''இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுகாக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் முதலமைச்சர் அவர்களே?''
''பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய முதலமைச்சரே செயலற்று இருப்பது ஏன்? ''
''முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது'.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும், ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்திற்கு நீதி கோரி பதாகை ஏந்தி நிற்கும் தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications