3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து... சீர்வரிசைப் பொருட்களை வழங்கிய ஸ்டாலின்
சென்னை: சென்னை துறைமுகம் பகுதியில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த ஸ்டாலின் அவர்களுக்கு சீர்வரிசைப் பொருட்களையும் கொடுத்து வாழ்த்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் வெளிநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்த மு.க.ஸ்டாலின், இன்று 3 ஜோடிகளின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபு தனது துறைமுகம் தொகுதியில் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை எளிமையாக செய்திருந்தார். சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் மணமக்களின் பெற்றோர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதேபோல் ராஜா அண்ணாமலை மன்றத்தில் அர்ச்சகர்கள் 70 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை ஸ்டாலின் வழங்கினார். மேலும், அவர்களுக்கு நோய் தடுப்பு உபகரணங்கள், நிதியுதவியும் செய்தார். அதைத் தொடர்ந்து ரத்ததானம் வழங்கிய திமுகவினர், தன்னார்வலர்கள் 126 பேருக்கு சமூக விலகலை கடைபித்து சான்றிதழ் வழங்கிய ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அங்கிருந்து திரு.வி.க.நகர் தொகுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின் முடி திருத்தும் தொழிலாளர்கள் 160 பேருக்கு 15 வகையான அத்தியாவசிய பொருட்களை அளித்தார். இதேபோல் தனது தொகுதியான கொளத்தூரில் 900 தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, போர்வை, புது தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை மு.க ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல் செவிலியர்கள், கழிவுநீர் அகற்றும் தொழிலாளர்கள், உள்ளிட்டோருக்கு சானிடைஸர், என்.95 முகக்கவசம், சோப்பு உள்ளிட்ட பொருட்களை ஸ்டாலின் வழங்கினார். வீட்டில் இருந்தவாறே காணொலி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் உரையாற்றி வந்த ஸ்டாலின் இன்று சென்னை மாநகரத்திற்குள் வரும் 3 தொகுதிகளுக்கு விசிட் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications