"ம்..ன்னு முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை சொல்லட்டும்.. நாங்க 38 பேரும் ரெடி".. கனிமொழி அதிரடி
நீட் தேர்வு குறித்து கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் ஒரு உத்தரவிட்டால் போதும்.. எம்பிக்கள் எல்லாம் நாங்க ரெடி.. நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து பிரதமர் மோடியிடம் நேரிலேயே சென்று வலியுறுத்துவோம்" என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி முடிவெடுத்துவிட்டார்..
அதற்காக, தன்னுடைய தொகுதியில் தொடர்ந்து முகாமிட்டு வருகிறார்... தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வுகளை கையில் எடுத்துள்ளார்.

நிவாரணம்
விழிப்புணர்வுகள், அதிரடி ஆய்வுகள் என தூத்துக்குடியில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.. நேற்றுகூட தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து ஆபீசில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கனிமொழி எம்பி வழங்கினார்... பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது:

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்...கடந்த சில நாட்களாகவே, மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்... கிராமங்களில் முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.. மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய கொரோனா தடுப்பூசி இன்னும் வரவே இல்லை.. இதனால், இன்னும் பல மாவட்டங்களில் போதியளவு தடுப்பூசி போட முடியாத நிலைமை இருக்கிறது.

திமுக
திமுக ஆட்சி பொறுப்பேற்று இந்த ஒரு மாத காலத்தில் மக்கள் நலப் பணிகளை முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார்.. மகளிருக்கு நகர பேருந்தில் இலவசமாக பயணம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது... நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்..

முதல்வர்
நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்வதற்காக முதலமைச்சர் ஒரு ஆய்வுக் குழுவையும் அமைத்துள்ளார். திமுக நீட் தேர்வை எதிர்த்து வந்துள்ளது... தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம்... கண்டிப்பாக நீட் தேர்வு இல்லாத நிலையை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி காட்டுவார்... மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தந்துள்ள வாக்குறுதிகளையும் கண்டிப்பாக அவர் நிறைவேற்றுவார்.. அதேசமயம், எம்பிக்கள் அனைவரும் நேரில் சென்று வலியுறுத்த வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டால் அதை கண்டிப்பாக செய்வோம்" என்றார் கனிமொழி.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய்யை வீழ்த்த கனிமொழிக்கு பொறுப்பு! ஸ்டாலினின் அசைன்மென்ட்.. அதிரடி அரசியல் திட்டம்!












Click it and Unblock the Notifications