Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி அவரு மாரத்தான் சுப்பிரமணியன்.. என்னைவிட பெஸ்ட்! பட்டப்பெயர் வைத்து பாரட்டிய முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனை மாரத்தான் சுப்பிரமணியன் என்று அழைக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் விழாவில் அவர் பேசியதாவது, "செயல்படுவதிலே ஒரு 'மாரத்தான்' அமைச்சராக விளங்கிக் கொண்டிருக்கக் கூடியவர் நம்முடைய மா.சு அவர்கள். நான் மட்டுமல்ல. எல்லோராலும் அவர் மா.சு, மா.சு என்று அழைப்பதைவிட மாரத்தான். மாரத்தான் என்று தான் அதிகம் அழைக்க தொடங்கி இருக்கிறார்கள். அவரோட அப்பா பெயர் மாணிக்கம், அதனால் அவர் மா.சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டு கொண்டிருந்தாலும் அவரை இப்போது எல்லாம் 'மாரத்தான்' சுப்பிரமணியன் என்று தான் அழைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்.

MK Stalin wish Ma Subramaniyan as Marathon Subramaniyan

அதுவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. எந்த விழாவை நடத்தினாலும், அது கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி. அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இதுபோன்ற பொதுவாக இருக்கக்கூடிய மக்கள் பங்கேற்கக்கூடிய விழாவாக இருந்தாலும், அதில் தனக்கென்று தனி முத்திரை பதிக்கக்கூடிய ஒருவர் மாசு அவர்கள்.

அவர் நிகழ்ச்சியை பார்த்து யாரும் காப்பியடிக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு சிறப்போடு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை நடத்துவார். அதுமட்டுமல்ல, அவரைப் போல யாரும் ஒட முடியாது. அது நானாக இருந்தாலும் சரி, இங்கே இருக்கக்கூடிய விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தாலும் சரி இங்கே இருக்கக்கூடிய திரு பொன்முடி, திரு சேகர் பாபு, திரு மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதி மாறனாக இருந்தாலும் சரி இப்படி ஒட வேண்டும் என்று சொன்னாலே, வியர்த்துவிடும் எங்களுக்கு.

அந்த அளவிற்கு நம்முடைய மாசு அவர்கள் ஓடக்கூடியவர். அவர் உள்ளூரில் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்கள் மட்டுமல்ல உலகெங்கும் பல நாடுகளுக்கு சென்று ஓடியுள்ளார். அந்த பெருமையும் அவருக்கு உண்டு. ஆட்டநாயகன் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இவர் ஓட்டநாயகன்1996-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் நான் மேயராக நின்று வெற்றிபெற்று, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்றினேன். அதற்குப் பிறகு 2001-ஆம் ஆண்டும் நடைபெற்ற மேயர் தேர்தலிலும் வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்று பணியாற்றினேன். அதற்குப்பிறகு 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல்ல நம்முடைய மா சுப்பிரமணியன் அவர்கள் வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்று பணியாற்றினார்.

நான் மேயராக இருந்தபோது எந்தளவிற்கு பாராட்டை பெற்றேனோ, அதுவும் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடத்திலே எந்த அளவிற்கு பாராட்டை நான் பெற்றேனோ, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அதைவிட அதிகமாக பாராட்டை பெற்றிருக்கக்கூடியவர் நம்முடைய மா.சு. அவர்கள் தலைவர் கலைஞரிடத்திலே நல்ல பெயர் வாங்குவது என்பது சாதாரண விஷயமல்ல ஆனால் மா.சு அவர்கள் நல்ல பெயரை கலைஞர் இடத்திலும் பெற்றவர்.

அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் என்ற பெரும் பொறுப்பை எடுத்துக் கொண்டு மிக சுறுசுறுப்பாக அவர் பணியாற்றிக் கொண்டிருப்பதை இந்த நாடு நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக நாம் ஆட்சிக்கு வந்தபோது எப்படிப்பட்ட நிலையில் நாம் பொறுப்பேற்றோம் என்பது உங்களுக்கு தெரியும் கொரோனா என்ற ஒரு கொடிய நோயினால் இந்தியா மட்டுமல்ல உலகமே சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் தான் தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து நாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தோம். அந்த கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தினோம் என்பது உங்களுக்கு தெரியும் அதிலே முதலமைச்சராக பொறுப்பேற்ற நான் மட்டுமல்ல. அமைச்சர்களாக இருந்தவர்கள் மட்டுமல்ல இன்னும் சொல்லப்போனால் அனைத்து அமைச்சர்களும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களாக மாறினார்கள்.

அதேபோல அரசு அதிகாரிகள் மாநகராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், என்று எல்லா அதிகாரிகளும், பணியாளர்களும் ஒற்றுமையாக இணைந்து ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிக்கின்ற பணியிலே தடுக்கின்ற பணியிலே ஈடுபட்டது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். அப்பணியிலே சிறப்பிற்குரிய இடத்தை பெற்றிருக்கிறார் நம்முடைய மா.சு அவர்கள்.

அதனைத் தொடர்ந்து, இன்றைக்கு மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, கலைஞரின் வருமுன் காப்போம் முகாம்கள், பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்திகள், மனநல முகாம்கள் இவை எல்லாத்துக்கும் மேலாக கிண்டியில் இருக்கக்கூடிய கலைஞர் நூற்றாண்டு நினைவாக உயர்சிறப்பு மருத்துவமனை.

இதுவரை அரசினுடைய சாதனையில் இடம்பெறக்கூடிய வகையில் ஒன்று இருக்கிறது என்றால் பதினைந்தே மாதத்தில் அந்த மருத்துவமனையை கட்டி ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் அந்த மருத்துவமனை இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கிடையிலே தான் இந்த மாரத்தான் சாதனையையும், நம்முடைய மா.சு அவர்கள் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை மாரத்தான் போட்டியாக அவர் கொண்டாடி காட்டியிருக்கிறார். அவர் மூன்றாண்டு காலமாக இந்த மாரத்தான் போட்டியை தொடர்ந்து நடத்தி வருகிறார். 2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று காலம் என்பதால், கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிகளை மெய்நிகர் போட்டியாக நடத்தினார். அந்தச் சூழ்நிலையிலும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்தார்கள் பதிவுக் கட்டணமாக கிடைத்த 23 லட்சம் ரூபாயை அரசிடம் பேரிடர் நிவாரண நிதியாக வழங்கினார்.

2021-ஆம் ஆண்டு நடந்த மாரத்தான் போட்டியில், பதிவுக் கட்டணமாக கிடைத்த 56 லட்சம் ரூபாயை கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக என்னிடம் அன்றைக்கு வழங்கினார். கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் 43 ஆயிரத்து 231 பேர் பங்கேற்று ஓடியிருக்கிறார்கள். இது ஆசிய சாதனையாக அமைந்தது. அதற்கான சான்றிதழ்களையும் என்னிடம் வழங்கினார் அந்தப் போட்டிகளில் கிடைத்த 1 கோடியே 22 லட்சம் ரூபாயை அரசிடம் ஒப்படைத்தார்.

அந்தத் தொகை, 'நமக்கு நாமே' திட்டத்தின் மூலமா, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. வெளியூர்களிலிருந்து, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரக்கூடிய மக்கள் தங்குவதற்காக கட்டடம் கட்ட பயன்படுத்த அந்த நிதி சேர்க்கப்பட்டிருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+