ஓ மை காட்.. அப்போ அடுத்த முதல்வர் ஸ்ருதிஹாசன் இல்லையா? கமல் 'நச்' பதில்
சென்னை: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், கமல்ஹாசன் தனது வலிமையை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.
என்னதான் 2019 மக்களவை தேர்தலை சந்தித்த அனுபவம் இருந்தாலும், தமிழத்தின் தலையெழுத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கும் சட்டமன்ற தேர்தல் களம் என்பது வேறு. அது கமலுக்கும் புதிது.
வேட்பாளர்கள் தேர்வு, குழப்பமற்ற கூட்டணி முடிவு, உள்ளடி வேலை இல்லாத கட்சி நிர்வாகம் என்று ஓரளவு சீராகவே இன்று வரை அரசியல் களத்தில் பயணப்பட்டு கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.

SEET தேர்வு
தற்போது வேட்பாளர்களை அறிவித்து, ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்யும் அளவுக்கு பரபர மோடில் உள்ள கமல், தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் MBBS படிப்பிற்கு SEET தேர்வு நடத்தப்படும் என்றும், உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றும் ராணுவ கேண்டீன் போல மக்கள் கேண்டீன் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு புதிய திட்டங்கள் மநீம அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

என் பிள்ளைகள்
செய்தியாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் கமல்ஹாசன் மிக தெளிவாக விளக்கம் அளித்தார். குறிப்பாக, SEET குறித்த கேள்விக்கு, அக்கட்சியின் பொன்ராஜ் விளக்கம் கொடுத்தார். கிட்டத்தட்ட இந்த தேர்தல் அறிக்கை நிகழ்வு 40 நிமிடங்கள் வரை நடைபெற்றது. இறுதியில், வெளியூரில் இருக்கும் உங்கள் மகள்கள் இருவரும் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'என்னுடைய பிள்ளைகளாக வந்து என்னுடன் தங்குவார்கள்' என்ற 'நறுக்' பதிலோடு முடித்து எழுந்துவிட்டார்.

ஓப்பன் ஸ்டேட்மென்ட்
பத்திரிக்கையாளர்கள் இந்த கேள்வியை அவரிடம் கேட்டதற்கு காரணமே மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தான். இளையவர் அக்ஷரா எப்போது சற்று அடக்கி வாசிப்பது போன்றே இருப்பார். ஆனால், முன்னவர் அனைத்திலும் பின்னிப்பெடலெடுப்பவர். எதுவாக இருந்தாலும் ஓப்பன் ஸ்டேட்மென்ட் தான்.

ஆழமாக பார்க்கிறேன்
அந்த வகையில், கடந்த 2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவிருந்த சூழலில், ஸ்ருதியிடம் அப்பாவின் அரசியல் பாதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ருதி, "எனது தந்தை கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு எனக்கும் அந்த பக்கம் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இதுவரை நம்மை சுற்றி நடப்பதை கவனிக்காமல் இருந்த காலம் போய்விட்டது. இப்போது ஆழமாக எல்லாம் பார்க்கிறேன்.

புதிய மாற்றம்
நாடாளுமன்றம் என்றால் என்ன? ராஜ்யசபை எல்லாம் தெரிந்துகொள்கிறேன். அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை. ஆனால் எனது தந்தை மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வருவது மிகவும் தேவை. அவருக்கு சமூக பிரச்சினைகளில் நல்ல தெளிவு இருக்கிறது. இளைஞர்கள், பெரியவர்களாக இருந்தாலும் சரி ஒரு புதிய மாற்றத்துக்காக ஓட்டுப்போட வேண்டும் என்பது எனது கருத்து" என்றார் அதிரடியாக.

அரசியல் வாடை
மக்களவை தேர்தலுக்கே இப்படி சொன்னவர், சட்டமன்ற தேர்தலுக்கு சும்மாவா இருப்பார்? ஒருவேளை அப்பாவுக்கு துணையாக பிரச்சாரத்தில் ஈடுபட வருவாரோ? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், ஸ்ருதியை பார்ப்பதற்கென்றே கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கமலோ 'என் மகள்களாக வந்து தங்கிவிட்டுச் செல்வார்கள்' என்ற தொனியில் பதிலளிக்க, அப்படியெனில், தன் பிள்ளைகளை அரசியல் வாடையிலிந்து அப்பா அரசியல்வாதி கமல் தள்ளி வைக்க விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

வரிசையில் கட்சிகள்
ஒருவேளை மநீம கட்சி இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று, ஒரு எக்ஸ் ஃபேக்டராக... அதாவது தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தால், அக்கட்சியின் மவுசு அடுத்த தேர்தலுக்கு ஏகத்துக்கும் எகிறிவிடும். பிறகு, விஜயகாந்த் வீட்டில் அரசியல் தலைவர் காத்திருந்த காலம் போன்று, ஆழ்வார்பேட்டையிலும் அவர்கள் காத்திருக்கலாம். யார் கண்டா? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்.

ஸ்ருதி சிஎம் ஆகலாம்
அப்படி ஒரு அதிசயம் நடக்கும் பட்சத்தில், கமலுக்கு அப்போது வயது 71 அல்லது 72 இருக்கும். இப்போது இருப்பதை விட அப்போது இன்னும் தளர்ந்திருப்பார். அப்படி அவர் தளரும் பட்சத்தில், ஸ்ருதி அரசியல் களமிறங்கி மைக்கைப் பிடித்தால், அதற்கு வேற லெவலில் இம்பேக்ட் கூட ஏற்படலாம். யார் யாருக்கும் என்ன மேஜிக் இருக்கும் என்று எவருக்கும் தெரியாது. இவ்வளவு பாசிபிலிட்டிஸ் இருக்கும் நிலையில், கமல் இந்த தேர்தலிலையே தன் மகள்களை அரசியல் களத்தில் இருந்து விலக்கி வைக்கவே முயற்சிக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications