நேற்று முன் தினம் போல் இன்றும் சென்னையில் மழை.. பூமியை குளிர்த்த சின்ன சின்ன மழை!
சென்னை: சென்னையில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. நேற்று முன் தினம் எல்லா இடங்களில் இல்லாவிட்டாலும் சில இடங்களில் மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழையால் மக்கள் மகிழ்ந்தனர்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்பசலனம், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் பிற்பகல் முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், முகப்பேர், அண்ணாநகர், அமைந்தகரை, கோயம்பேடு உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்களுக்கு கனமழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை உள்பட புறநகர் பகுதிகளிலும் குளிர்ந்த காற்று மழை பெய்தது.
இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அலுவலக பணி முடியும் நேரத்தில் மழை வந்ததால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது போல் நேற்று முன் தினமும் திருமுல்லைவாயல், பட்டாபிராம், அம்பத்தூர் மற்றும் அயப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக மழை பெய்தது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரு நாட்களுக்கு மழை பெய்யலாம் என வானிலை மையம் கடந்த 7-ஆம் தேதி அறிவித்தது. மேலும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவித்தனர். இது போல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications