பாரதியார் மட்டும் வாழ்ந்திருந்தால்.. பிரதமர் மோடியை புகழ்ந்து பாடியிருப்பாராம்.. சொல்கிறார் தமிழிசை!
சென்னை: மகாகவி பாரதியார் வாழ்ந்திருந்தால், பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி புகழ்ந்து பாடல் பாடி இருப்பார் என்று தமிழக பாஜக முன்னாள் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதேபோல் 2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பின், பாரதியாருக்கு பிரம்மாண்டமாக அரசு விழா எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் பாரதியாரை நினைவு கூர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் பாரதியார் சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாரதியாருக்கு வணக்கம் சொல்லும் நேரத்தில் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வந்தே மாதிரம் 150வது ஆண்டு விவாதத்தில் பாரதியார் மற்றும் வ.உ.சியை நினைவு கூர்ந்தார் பிரதமர் மோடி. இந்தியாவில் எந்த பிரதமரும் பாரதியாருக்கும், வ.உ.சி-க்கும் மரியாதை செலுத்தியதே கிடையாது.
ஒருவேளை பாரதியார் இருந்திருந்தால், பிரதமர் மோடியை வாழ்த்தி பாடி இருப்பார். ஏனென்றால் தேசியத்தையும், தெய்வீகத்தையும் முன்னிறுத்தி வருகிறார். அதேபோல் அண்ணா அறிவாலயத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசிய கொடியை கூட திமுக ஏற்றியதே இல்லை. ஆனால் தேசப்பற்று பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தேச பக்தர்கள் போல் திருச்சி சிவா போன்றோர் நாடகமாடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி காசியில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்கு ஏராளமான விஷயங்களை மத்திய அரசு செய்து வருகிறது. ஆனால் திமுக இதுவரை பாரதியாருக்கு அரசு விழாவை எடுக்கவில்லை.
2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற பின், பாரதியாருக்கு பிரதமர் மோடி முன்னிலையில் பிரம்மாண்ட அரசு விழா நடத்தும். அதற்கான கோரிக்கை நிச்சயம் வைக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசியக் கொடி ஏற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications