“திரௌபதி II திரைப்படம்.. எதிர்ப்பு கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கு..” ஒப்புக் கொண்ட மோகன் ஜி!
சென்னை: திரௌபதி II திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்திருக்கும் நிலையில், படத்திற்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதாக, இப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி கூறியிருக்கிறார்.
திரௌபதி II படம் வெளியாவதால்.. விஜய்யின் தெறி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டிருந்தார் மோகன் ஜி. தெறி ரீ-ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அஜித்தின் மங்காத்தாவிடம் வந்து மாட்டிக்கொண்டது திரௌபதி II.

இப்படி இருக்கையில், ஓசூரில் ரசிகர்களுடன் படம் பார்த்த மோகன் ஜி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வரவேற்பு எப்படி இருக்கிறது? என்று கூறியிருந்தார். அவர் பேசியதாவது, "இது திருவண்ணாமலையை ஆண்ட 'வள்ளால' மகாராஜாவோட கதை, ஒரு சரித்திர படம். மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. முதல்ல கொஞ்சம் சரியில்ல, நானே வருத்தப்பட்டுருந்தேன். ஆனால் தற்போது வரவேற்பு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க நிறைய பெண்கள் தியேட்டருக்கு வராங்க. நிறைய பேர் குடும்பம், குடும்பமா வந்து பார்க்கறாங்க.
IMDb-ல் நல்ல ரேட்டிங் கிடைச்சிருக்கு. 9 சம்திங் கிடைச்சிருக்கு. புக்கிங்ஸ்லயும் 8.2 கிடைச்சிருக்கு. இதெல்லாம் ஒரு ஒரு சின்ன பட்ஜெட்ல எடுத்த ஒரு வரலாற்று படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புதான்.
படம் மக்களிடை சரியாக போய் சேர்ந்திருக்கிறது. இது படை எடுத்து வந்தவங்களை பத்தின கதை. அது மக்களிடையே சென்று சேர்ந்திருக்கு. எதிர்ப்பு குரல் சுத்தமாவே இல்லை. மக்கள் எல்லாரும் ஏத்துக்குறாங்க. படத்தை நடந்த உண்மையாக ஏத்துக்குறாங்க. அதையும் தாண்டி அவதூறு செய்பவர்கள்.. செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நிறைய உண்மைகள் தமிழ் மக்களுக்கு தெரிஞ்சிற போகுதுன்னு கொஞ்சம் எதிர்ப்பு அதிகமாதான் இருக்கு" என்று கூறியிருக்கிறார்.
மோகன் ஜி, புக்கிங் பற்றி சொன்னது உண்மைதான். Book my show-ல் இந்த திரைப்படத்திற்கு 8.3 கொடுத்திருக்கிறார்கள். ஆனால் IMDb-ல் இந்த திரைப்படத்திற்கு 5.5 ரேட்டிங்தான் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications