பெண்களை பாதுகாக்கும் 181 சேவை.. நல்ல வரவேற்பு.. 10 நாளில் 10,000க்கும் மேற்பட்ட அழைப்புகள்
சென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்ட 10 நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த சேவை, டெல்லி,குஜராத்தை தொடர்ந்து கடந்த 10 ம் தேதி தமிழகத்திலும் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த மையத்தை நிர்வகிக்க ஐந்து வழக்கறிஞர்கள், ஐந்து மனநல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் என பணியமர்த்தப்பட்டுள்ளனர். தவிர, இந்த மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

சென்னை, அம்பத்துாரில் உள்ள, 'அம்மா கால் சென்டர்' உதவியுடன், இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. 181 எண்ணிற்கு வரும் அழைப்புகள் குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு, காப்பகங்களில் தங்க வைத்து, மனநலம், மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
தினமும் 700 முதல் 1000 அழைப்புகள் வருவதாகவும் இவற்றில், அதிகபட்சமாக கணவன் மது அருந்துவிட்டு கொடுமைபடுத்துவது, குழந்தைகள், மனைவியுடன் கணவர் நேரம் ஒதுக்குவதில்லை, பெற்றோரை மகன் அல்லது மகள் கவனிப்பதில்லை உட்பட குடும்ப வன்முறையால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாங்கள் சந்திக்கும் பாதிப்புகளை அதிக அளவில் பெண்கள் தெரிவித்து வருவதாக அங்குள்ள அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கவுன்சிலிங் மூலம் பிரிந்திருந்த ஒரு சில தம்பதிகளை இணைத்து வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
அதே போல், அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான தகவல்களை பெறுவது உள்ளிட்ட அழைப்புகளும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications