அம்மா வீட்டுக்கு டூவீலரில் சென்ற சுதா.. பின்னாடி வந்து மோதிய ஆட்டோ.. குழந்தையுடன் பரிதாப மரணம்!
பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் தாய் - மகள் உயிரிழந்தனர்
சென்னை: சுதா மீதும், குழந்தை மீதும் பஸ்ஸின் டயர் ஏறி இறங்கியதை கண் முன்னாடியே பொதுமக்கள் பார்த்து அலறி விட்டனர்.. தாயும் - மகளும் பஸ் சக்கரத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த தம்பதி ஆறுமுகம் - சுதா.. இவர்களுக்கு ஷிவானி என்ற 5 வயது மகளும், தீபக் என்ற 2 வயது மகனும் உள்ளனர்.

நேற்று ஞாயிற்றுகிழமை லீவு என்பதால், சுதா தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு, கோவிலம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார்.. அங்கிருந்து தன்னுடைய வீட்டிற்கு டூவீலரில் குழந்தைகளை ஏற்றி கொண்டு திரும்பி வந்தார்.
கீழ்க்கட்டளை அருகே ஈச்சங்காடு மேடவாக்கம் மெயின் ரோட்டில் சுதா வந்து கொண்டிருந்தபோது, பின்னாடியே ஒரு ஆட்டோ வந்து சுதாவின் டூவீலர் மீது மோதிவிட்டது. இதில் சுதா நிலைதடுமாறி கீழே விழ, டூவீலரும் அப்படியே சாய்ந்துவிட்டது.
இதில் சுதா உட்பட 2 குழந்தைகளுமே கீழே விழுந்துவிட்டனர்.. மகன் ஒரு பக்கம் விழ, தாயும், மகளும் இன்னொரு பக்கத்தில் விழுந்தனர்... இதில் தடுமாறி எழுவதற்குள் அந்த பக்கம் மேற்கு தாம்பரத்தில் இருந்து தியாகராயநகர் நோக்கி சென்ற அரசு பஸ் வேகமாக வந்து தாய் - மகள் மீது ஏறிவிட்டது.. இதில், சுதா, ஷிவானி மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது..
இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.. ரோட்டோரம் விழுந்த மகன் தீபக் "அம்மா" என்று பீதியில் அலறினான். ஆனால் பஸ் டயர் ஏறி இறங்கியதில், தாயும், மகளும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பொதுமக்கள் கண் முன்னிலையிலேயே இவர்கள் துடிதுடித்து இறந்தனர்.
தகவலறிந்து பரங்கிமலை போலீசார் விரைந்து வந்தனர்.. காயங்களுடன் உயிர் தப்பிய தீபக்கை மீட்டதுடன், 2 சடலங்களையும் மீட்டனர்.. பஸ் டிரைவர் தங்கையாவை கைது செய்துள்ளனர்.. விசாரணையும் நடந்து வருகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications