அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே! இன்று உலக அன்னையர் தினம்!
சென்னை: உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்பையும் அரவணைப்பையும் தரும் தாயை போற்றி பலர் வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். அன்னையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அன்னையர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பலர் அன்னையிடம் ஆசி பெறுவர். எப்போதும் இது வேண்டும், அது வேண்டும் என கேட்காமல் பிறர் நலனில் அக்கறை காட்டும் அன்னைக்கு பரிசு பொருட்களையும் வாங்கிச் செல்கிறார்கள்.

அன்னையின் தியாகத்தை போற்றும் நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் பூக்கள், இனிப்புகள், வாழ்த்து அட்டைகளை தாய்க்கு பரிசாக கொடுக்கிறார்கள்.
இங்கிலாந்தை பொருத்தமட்டில் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனைகளை செய்கிறார்கள். ஜப்பானில் முன்னோர்களை நினைவுக் கூறும் நாளாக பார்க்கிறார்கள். மெக்சிகோவில் இசை, விருந்துடன் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
சில இடங்களில் அவரவர் வசதிக்கேற்ப தாய்க்கு பொன், பொருளை கொடுத்து அழகு பார்க்கிறார்கள். அன்னையின் அன்பு என்பதே இந்த நாளின் கருப்பொருளாகும். தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அன்னையிடம் ஆசி வாங்கி இந்த விழாவை கொண்டாடுகிறார்கள். அனைத்து அன்னைகளுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள். நீங்கள் எப்படி கொண்டாடினீர்கள் என்பதை மறக்காமல் கமெண்ட்டில் சொல்லுங்கள்.
-
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications