பெட்ரோல் பங்க்களில் நீண்ட வரிசை.. சென்னையில் அலைமோதும் வாகன ஓட்டிகள்.. இதுதான் பெரிய பிரச்சனையே!
சென்னை: சென்னை மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்பட பல பகுதிகளிலும் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகின்றனர்.
வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக மிக அதிக கனமழை பெய்தது. மேலும், இந்த தீவிர மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது. இந்நிலையில், கடலோர பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் மீட்பு நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

மேலும், அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே எங்கும் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து சேவையும் பாதிப்படைந்தது. இதனிடையே, பெட்ரோல் பங்க்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் எரிபொருட்களின் விநியோகம் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகள் பெரும்பாலானவை இன்னும் திறக்கப்படவில்லை.
சென்னையில், அண்ணா சாலை மற்றும் கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னையில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இதில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் வேறு பகுதிகளுக்கு சென்று பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வந்தனர்.
இதனால், பெட்ரோல், டீசல் கிடைக்கும் ஒருசில பங்க்களில் இருந்து வாகன ஓட்டிகள் தண்ணீர் பாட்டில்களில் பெட்ரோல், டீசல்களை வாங்கி செல்கின்றனர். மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்பட பல பகுதிகளில் ஒருசில பங்க்களே திறந்திருக்கும் நிலையில், அங்கு பெட்ரோல் போட வாகன ஓட்டிகள் அலைமோதி வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, பெட்ரோல் போட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அலுவலகங்களுக்குச் செல்வோர், மருத்துவமனைகளுக்குச் செல்வோர் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். அனைத்து பெட்ரோல் பங்குகளும் செயல்பாட்டுக்கு வரும் வரை, சென்னை மக்கள் இந்த பெட்ரோல் தட்டுப்பாடு பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஒருசில பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலில் மழை நீர் கலந்திருப்பதால், அவற்றை விநியோகம் செய்யவில்லை. பெட்ரோல், டீசலில் மழை நீர் கலந்திருக்கும் என்பதால், உரிய முறையில் பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், டீசலில் தண்ணீர் கலந்திருந்தால் அதை எளிதாக பிரித்தெடுத்து விடலாம், எத்தனால் கலந்த பெட்ரோலில் நீரை பிரித்தெடுப்பது கடினம் என பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் கையிருப்பிலோ அல்லது விற்பனை மையங்களுக்கு அவற்றை அனுப்புவதிலோ பாதிப்பு ஏதும் இல்லை. பெட்ரோலில் தண்ணீர் கலக்கவில்லை என்பதை உறுதிசெய்ய நேரமாவதால், விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications