பெண் கொடுத்த பாலியல் புகார்.. கோர்ட்டில் ஆஜர்படுத்த கரூர் கொண்டு செல்லப்பட்டார் முகிலன்
சென்னை: பாலியல் புகாரில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகிலனை, கரூர் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த அவர் அங்கு அழைத்து செல்லப்படுகிறார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் எதேச்சையாக நடந்தது இல்லை என்றும் திட்டமிட்ட சதி என்றும் அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அவர் அன்றைய தினம் முதல் காணவில்லை. இதனிடையே முகிலனுடன் போராட்டங்களில் ஈடுபட்ட நாமக்கல் பெண், கரூரில் ஒரு பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன் திருப்பதியில் ஆந்திர போலீஸாரால் மீட்கப்பட்டார்.
இதையடுத்து அவர் சென்னை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் பாலியல் வழக்கில் முகிலன் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முகிலன் இன்று காலை வார்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ரவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து பாலியல் வழக்கு தொடர்பான புகார் கரூர் நீதிமன்றத்தில் உள்ளதால் முகிலனை அங்கு நாளை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து முகிலன் கரூருக்கு அழைத்து செல்லப்படுகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications