Mukhtar: நாடார், காமராஜர் பற்றிய சர்ச்சை கருத்துக்கள்.. மன்னிப்பு கேட்டார் யூடியூபர் முக்தார்
சென்னை: காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பரப்பியதாக முக்தாருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்த நிலையில் அவர் வருத்தம் தெரிவித்து ட்வீட் பதிவிட்டுள்ளார். நான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நோக்கில் பயணிக்கிறவன். ஆகவே என்னுடைய நேர்காணல் மூலமாக குறிப்பிட்ட சமூக மக்களின் உணர்வுகள் புண்பட்டு இருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று முக்தார் கூறியுள்ளார்.
யூடியூபர் முக்தார் அண்மையில் "மை இந்தியா 24x7" என்ற சேனலில் நேர்காணல் நடத்தினார். அப்போது அவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார்.

காமராஜர் பற்றி சர்ச்சை கருத்து
காமராஜர் முதல்வராக சரியாக செயல்படவில்லை என்பதனால் தான் ஜவஹர்லால் நேரு டெல்லிக்கு வா என்று அழைத்து காமராஜரை தண்டித்ததாகவும், இதனால் தான் காமராஜர் 1963 ஆம் ஆண்டு ராஜினாமா செய்ததாகவும் கருத்துக்களை கூறினார். காமராஜர் கல்லணை போன்ற அணையா கட்டினாரா? எனவும், அவர் பள்ளிகள் மற்றும் அணைகள் கட்டுகிறேன் என்று சொல்லி ஊழல் செய்தது போன்று தொடர்பு படுத்தி பேசியிருந்தார்.
முக்தாரின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். உடனே இந்த வீடியோவை அழிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் அவர் காமராஜரின் சமூகம் பற்றியும் கிண்டல் செய்யும் வகையில் பேசியதாகவும் முக்தாருக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன.
நெல்லை, தூத்துக்குடியில் போராட்டம்
யூடியூபர் முக்தாருக்கு எதிராக காங்கேயத்தில் நாடார் பேரவை சார்பில் போலீசிடம் புகார் அளிக்கபப்ட்டது. இதேபோன்று முக்தாருக்கு எதிராக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போராட்டங்களும் நடந்தன. பணங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி நாடாரும் பகிரங்கமாக கண்டனம் தெரிவித்து விமர்சித்து இருந்தார். பல்வேறு இடங்களில் இருந்து கண்டன குரல்கள் எழுந்த நிலையில் முக்தார் மன்னிப்பு கேட்டுள்ளார்.
வருத்தம் தெரிவித்து ட்வீட் பதிவு
காமராஜர் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முக்தார் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- "வணக்கம். என்னுடைய நேருக்கு நேர் நேர்காணலில் நான் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி வழக்கம் போல் சிலர் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். அதன் காரணமாக, நான் மதிக்கும் அந்த சமூக மக்கள் வேதனைப் படுவது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது.
காமராஜர் ஆட்சி குறித்து சில முக்கிய பிரமுகர்கள் முன் வைத்து வந்து வந்த விமர்சனங்கள் மற்றும் வெவ்வேறு சேனல்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்த கருத்துக்களின் அடிப்படையில், அரசியல் பார்வையில் ஒரு பத்திரிக்கையாளராக என்னுடைய நேர்காணலில் அதை வாசித்து விளக்கம் பெற முயற்சித்தேன். எதுவும் என்னுடைய தனிப்பட்ட விமர்சனங்களோ கருத்தோ அல்ல.
வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்
நான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நோக்கில் பயணிக்கிறவன். ஆகவே என்னுடைய நேர்காணல் மூலமாக குறிப்பிட்ட சமூக மக்களின் உணர்வுகள் புண்பட்டு இருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எப்போதும் போல, நாம் ஒற்றுமையாக இருப்போம். நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications