மட்டன் கடைகளில் மலைக்க வைத்த கியூ.. கமகமக்கும் ஆட்டுக்கறிச்சோறு.. "அம்போ"ன்னு சென்னை கறிக்கடைகள்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலான இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.. ஆனால், தீபாவளியை கொண்டாட வெளியூர்வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால், சென்னையில் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தீபாவளி பண்டிகைக்கு, பலகாரம், புத்தாடை, பட்டாசு போலவே தவிர்க்க முடியாதது கறிச்சோறு. எனவேதான், தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் ஒவ்வொரு ஆட்டுச் சந்தையிலும் 10 கோடிக்கு மேல் வியாபாரம் களைகட்டிவிடுகிறது..

அந்தவகையில், கடந்த 2 வார காலமாகவே ஆட்டு சந்தைகளில் செம்மறி, வெள்ளாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்க துவங்கினர். இதில் கால்நடை வியாபாரிகளும் நல்ல லாபத்தை சம்பாதித்தனர்.. தீபாவளி தினத்தில் பெரும்பாலானோர் காலையிலேயே இட்லி - கறிக்குழம்பு சாப்பிடுவது வழக்கமாகும். சில வீடுகளில் மதிய உணவாகவும் கறிச்சோறு உள்ளது..
பங்குக்கறி: உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆடு வாங்கி, அதை தங்களுக்குள் பங்கு பிரித்து பங்குக்கறி வாங்கிக்கொள்ளும் நடைமுறை இன்றும் கிராமப்புறங்களில் உள்ளது. ஆட்டுச்சந்தைக்கு அல்லது மார்க்கெட் பகுதிக்கு சென்று கறி வாங்க முடியாத கிராமப்புற மக்கள், அல்லது விலை அதிகமாக உள்ளதால் வாங்க தயங்குவோருக்கு, இந்த பங்குக்கறி நடைமுறை கைகொடுத்து உதவுகிறது. அந்த அளவுக்கு ஆட்டுக்கறியும், தீபாவளியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும்.
தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சி கடைகள் நேற்று அதிகாலை 4 மணிக்கே திறந்து வைக்கப்பட்டிருந்தன.. இதனால், விடிகாலைலேயே பொதுமக்களின் கூட்டம் கறிகடைகளில் அதிகரித்து காணப்பட்டது. ஆட்டுகறி கிலோ ரூ.1000 த்திற்கும், கோழிக்கறி கிலோ ரூ.250 முதல் 300 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
அமாவாசை: நேற்று மாலை 5 மணிக்கு மேல் அமாவாசை பிறப்பதையொட்டி, இறைச்சி கடைகளில் விடியற்காலை முதலே பலரும் கூடிவிட்டார்கள்.. இதனால், இறைச்சி கடைகளில், நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர..
ஆடு மட்டுமின்றி கோழி, மீன் போன்றவற்றையும் பொதுமக்கள் காலையிலேயே வாங்கி சென்றார்கள்.. மீன்கடைகளில் சங்கரா, சீலா, மத்தி, வஞ்சிரம், கிழங்கான், கிளிமூக்கு, வாவல் உள்ளிட்ட வகை கடல்மீன்களும், நெய்மீன், கட்லா, ரோகு, ஜிலேபி உள்ளிட்ட டேம் மீன்களும் கடைகளில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.. இறால், நண்டு உள்ளிட்டவை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இறைச்சி கடைகள்: அந்தவகையில், தமிழகத்தில் அதிகாலை முதலே இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் குவிந்து போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றார்கள்.. ஆடு, கோழி, மீன் அதிகளவில் ஒரேநாளில் விற்பனையானதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், சென்னையில் கறிக்கடைகள் வெறிச்சோடிவிட்டன.. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் தங்கி பணிபுரியும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள், கடந்த 2 நாட்களுக்கு முன்பாகவே, தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்ல துவங்கினார்கள். இதனால், சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் இறைச்சி, மீன் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வியாபாரிகள் கவலை: தொடர் விடுமுறை காரணமாக மக்கள் கூட்டம் இல்லாததால் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு இறைச்சி வியாபாரம் மந்தமாகி விட்டதாக சென்னை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளன்ர.
-
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு!












Click it and Unblock the Notifications