நடிகை திரிஷாவின் எக்ஸ் பக்கம் திடீர் ஹேக்! என்னாச்சு? ரசிகர்களுக்காக இன்ஸ்டாவில் வெளியிட்ட அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷாவின் எக்ஸ் பக்கம் என்பது தற்போது முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு செய்துள்ளதோடு, ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. நடிகர் அஜித் குமாருடன் அவர் நடித்த ‛விடா முயற்சி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகிறது. அதோடு, அஜித் குமாரின் அடுத்த படமான ‛குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடிகை திரிஷா நடித்துள்ளார்.

trisha cinima

மேலும் கமல்ஹாசனின் ‛தக்லைப்' படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். நடிகர் ‛சூர்யாவின் 45' திரைப்படத்திலும் நடிகை திரிஷா நடித்து வருகிறார். இதனால் தற்போது பிஸியான நடிகையாக திரிஷா உள்ளார். அடுத்தடுத்து அவரது திரைப்படங்கள் ரீலிசுக்கு தயாராக உள்ளதால் அவரது ரசிகர், ரசிகைகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தான் நடிகை திரிஷா சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார். அவ்வப்போது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் செய்து வருகிறார். இந்நிலையில் தான் திடீரென்று நடிகை திரிஷாவின் ‛எக்ஸ்' சமூக வலைதள பக்கம் திடீரென்று முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனை நடிகை திரிஷா உறுதி செய்துள்ளார். இதுபற்றி திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில், ‛‛எனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அது சரிசெய்யப்படும்வரை அதில் பதிவிடப்படும் பதிவுகள் என் பதிவல்ல'' என கூறியுள்ளார்.

நடிகை திரிஷாவின் இந்த பதிவு அவரது ரசிகர், ரசிகைகளுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பொதுவாக ஒரு பிரபலங்களின் வலைதள பக்கங்களை ஹேக் செய்யும்போது சர்ச்சைக்குரிய பதிவுகள் என்பது பதிவிடப்படும். ஆனால் தற்போது வரை திரிஷாவின் எக்ஸ் வலைதள பக்கத்தில் அப்படி எந்த பதிவும் இடம்பெறவில்லை. அதனை நினைத்து ரசிகர், ரசிகைகள் நிம்மதியடைந்துள்ளனர்.

இருப்பினும் திரிஷாவின் எக்ஸ் வலைதள பக்கத்தை ‛ஹேக்' செய்தது யார்? எதற்காக ஹேக் செய்தனர்? என்பது பற்றிய விபரங்கள் தெரியவில்லை. அதுபற்றி எதுவும் திரிஷா தெரிவிக்கவில்லை. தற்போது ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் பக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் திரிஷா தரப்பு ஈடுபட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+