Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடிகட்டிப் பறக்கும் சீமான் மனைவி ஆதிக்கம்? சாதிக் கட்சியாக நாதக மாறுவதாக நிர்வாகி ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியில் சாதியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக, அந்தக் கட்சியை விட்டு வெளியேறியுள்ள ஒருங்கிணைப்பாளர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது. அந்தக் கட்சியின் முகமாகச் சீமான் அடையாளம் காட்டப்பட்டார். இந்தக் கட்சி நல்ல வளர்ச்சியைத் தமிழ்நாட்டில் அடைந்துவருகிறது.

Naam Tamil Katchi is not under the control of Seaman

ஆனால், சமீப காலமாகச் சீமானைத்தாண்டி அடையாளம் காணப்பட்ட இரண்டாம் கட்டத் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி வருகிறார்கள். அதற்குக் காரணம் கட்சி அவரது மனைவி கயல்விழி கைக்குச் சென்றுவிட்டது என்று குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள்.

மனைவியைப் பொதுச்செயலாளராக்கக் காய்கள் நகர்த்தப்படுவதாக ஊடகங்களில் செய்தி கசிந்து வருகிறது.

இந்நிலையில், அக்கட்சியை விட்டு வெளியேறி உள்ள கொங்குப் பகுதியின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் அம்மையப்பன் நாதக சாதி கட்சியாக மாறி வருவதாகப் புகார் கூறியுள்ளார்.

Naam Tamil Katchi is not under the control of Seaman

அவர் இது குறித்துப் பேசும் போது "சீமான் சாதிக்கு எதிராகப் பேசியது எல்லாம் மேடையோடு போய்விட்டது. கவுண்டருக்குப் பொறுப்புக் கொடுத்தால் கட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள். அதனால்தான் கல்யாணசுந்தரம் போன்றவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

அதைப்போல வன்னியருக்குக் கொடுத்தால் கட்சியைக் கைப்பற்றிவிடுவார்கள். ஆகவே, வன்னியர்களுக்குக் கட்சிக்குள் பெரிய பொறுப்பு இதுவரை அளிக்கப்பட வில்லை.

தேவர் சமூகத்திற்கும் இதே நிலைதான். கட்சிக்குள் நல்ல பொறுப்பிலிருந்த அந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் கட்சியைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். ஆதித் தமிழர்கள் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குக் கூட இதே நிலைதான்.

முழுக்க முழுக்க சாதி என்ன என்று கேட்டுவிட்டுத் தான் கட்சியில் சீட்டுக் கொடுக்கிறார்கள். அதான் இன்றைய நாம் தமிழர் கட்சியின் நிலை" என்று பல உண்மைகளைப் போட்டு உடைத்திருக்கிறார் அம்மையப்பன்.

Naam Tamil Katchi is not under the control of Seaman

இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தவர். அந்தக் கட்சியின் தொடர்பே வேண்டாம் என்று கும்பிடுபோட்டு விட்டு வெளியே வந்துள்ளார்.

என்ன நடக்கிறது நாதகவுக்குள். விளக்கமாகப் பேசுகிறார் ராஜா அம்மையப்பன், "சுமார் 9 ஆண்டுகளாகத்தான் நான் நாம் தமிழர் கட்சியில் பயணித்து வந்தேன். அதற்கு முன்னாள் வேறு ஒரு கட்சியில் தலைவராக இருந்தேன். 23 வயதிலிருந்து பிரபாகரன் மீது அதிகப் பற்று கொண்டவன்தான். அவரை அதிகம் நேசித்தவன். இலங்கைத் தமிழர்களுக்காக அதிகம் வேதனைப்பட்டிருக்கிறேன்.

Naam Tamil Katchi is not under the control of Seaman

அந்த நேரத்தில்தான் சீமான் இலங்கைத் தமிழர்களுக்காக மிகத் தீவிரமாகக் குரல் கொடுத்து வந்தார். ஆகவே அவர் மீது பற்றுக் கொண்டு அந்தக் கட்சியில் இணைந்தேன். தர்மபுரி நாடாளுமன்றத் தேர்தலில் நாதக சார்பில் 2009இல் போட்டியிட்டு இருக்கிறேன். நல்ல வாக்குகள் வாங்கினேன்.

கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சிக்காக மிகத் தீவிரமாக பணியாற்றி இருக்கிறேன். என்னைத் தெரியாத நிர்வாகிகள் கொங்கு மண்டலத்தில் இருக்கவே முடியாது. எனது வேலைகளைப் பார்த்துவிட்டு சீமான், கட்சியின் கட்டமைப்புக் குழுவில் உறுப்பினராக வைத்தார்.

கடந்த சட்டசபைத் தேர்தல் வரை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அதன் பின்னால் திடீரென்று ஒரு மாற்றம். நிர்வாகிகளே போய் சீமானைச் சந்திக்க முடியாத ஒரு சூழ்நிலை. அவரைப் பார்த்துப் பேச முடியாத சூழ்நிலை.

ஏதேனும் பேசவேண்டும் என்றால் வாட்ஸ் அப்பில் குரல் பதிவு போட்டால் பதில் சொல்வார். ஆனால், இப்போது அந்தக் குரல் பதிவு எத்தனை இடங்களுக்குப் போய் வருகிறது என்பது எங்களுக்குத் தெரியும். அந்தளவுக்கு மன சங்கடத்தை அது ஏற்படுத்தியது.

Naam Tamil Katchi is not under the control of Seaman

ஒரு கட்சியில் இருக்கிறோம் என்றால் சுயமரியாதை இருக்க வேண்டும். சாதி பார்த்துத்தான் அந்தக் கட்சி நடக்கிறது.

கட்சியின் பொதுச்செயலாளர் தடா சந்திரசேகர் மறைந்துவிட்டார். அவருக்குப் பின் அந்தப் பதவிக்கு யாரேனும் வந்துதான் ஆகவேண்டும். அந்தத் தருணத்தில் சீமான் தடுமாற்றத்திலிருந்தார். யாரோ ஒருவர் சீமானை இயக்குவதாக உணர்ந்தோம்.

தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காகப் பொதுக்குழுவைக் கூட்டினார்கள். அதற்குச் சீமான் மனைவி வந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அவரை கட்சிக்குள்ளாக நான் பார்த்ததே இல்லை. அவர் பொதுச்செயலாளராக வர விரும்புவதாகச் சிலர் சொன்னார்கள்.

கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த ராவணன் கட்சியில் எந்த நடவடிக்கைகளிலும் சமீப காலமாகக் காணோம்.

சீமானுக்குக் கல்யாணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அவரது மனைவியின் தலையீடு இருந்ததே இல்லை. தடா சந்திரசேகர் மறைக்கும் பின் கட்சி சீமானின் கைக்குச் சென்றுவிட்டது.

இத்தனை ஆண்டுகளாகக் கட்சியை வளர்த்தவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். புதியதாகச் சிலர் சீமானைச் சுற்றி ஒரு வேலி அமைத்துவிட்டனர். அவர்கள் அனைவரும் சீமானின் மனையின் ஆட்கள்.

இந்தக் கட்சியைச் சீமான் மட்டுமே உருவாக்கவில்லை. பலரது உழைப்பு உள்ளது. பலரது பணம் உள்ளது. பலரது குடும்பம் உள்ளது. ஆகவே, அவரது மனைவி தனக்குத் தேவையானவர்களை உள்ளே கொண்டுவருகிறார். காளியம்மாளுக்குக் கூட கடைசி நேரம் வரை சீட்டு வழங்குவதாக இல்லை. இறுதிக்கட்டத்தில் அவரை நிறுத்தி உள்ளனர்" என்று கண் கலங்குகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+