Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நொறுங்கிடுச்சே! நாம் தமிழருக்கு படுதோல்வி.. 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.. சீமானுக்கு பெரிய அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி. இது நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு, புதுச்சேரியில் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை நாம் தமிழர் சின்னம் மாறி புதிய சின்னத்தில் போட்டியிட்டது.

tamil nadu lok sabha election result 2024 Naam tamilar Party lok sabha election 2024 dmk bjp admk 2024 2024

போட்டியிட்ட எல்லா இடங்களிலும் நாம் தமிழர் தோல்வி அடைந்து உள்ளது. ஆனால் 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள், தஞ்சாவூரில் ஹுமாயூன் ஒன்றரை லட்சம் வாக்குகள், 20 தொகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள். 4 தொகுதிகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அசத்தி உள்ளது.

இன்று தேர்தல் ஆணையம் நாம் தமிழரின் வாக்கு சதவிகிதத்தை வெளியிடும். அதன்பின்பே அவர்களின் வாக்கு சதவிகிதம் முன்னேறி உள்ளதா இல்லையா என்பது தெரிய வரும்.

3வது இடம் பிடித்த நாம் தமிழர்: நாம் தமிழர் கட்சி பின்வரும் தொகுதிகளில் 3வது இடம் பிடித்தது.

கன்னியாகுமரி (அதிமுகவை பின்னுக்கு தள்ளி)
ஈரோடு (பாஜக கூட்டணி (தமாகா) வேட்பாளரை பின்னுக்கு தள்ளி)
கள்ளக்குறிச்சி (பாமகவை பின்னுக்கு தள்ளி)
நாகை (பாஜகவை பின்னுக்கு தள்ளி)
திருச்சி (அமமுகவை பின்னுக்கு தள்ளி)
புதுச்சேரி (அதிமுகவை பின்னுக்கு தள்ளி)

அதிகபட்ச வாக்குகள் - 1.63 லட்சம் (சிவகங்கை) தொகுதி.

நாம் தமிழர் தோல்வி: இதில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் டெபாசிட் இழந்துள்ளது. . சிவகங்கையில் அதிகபட்சமாக 1.63 லட்சம் வாக்குகள் பெற்றது நாதக. அங்கே நாம் தமிழர் சார்பாக எழிலரசி 163412 வாக்குகள் பெற்றார்.

கன்னியாகுமரியில் அதிமுகவிவை பின்னுக்குத் தள்ளி 3வது இடம் பிடித்துள்ளது. 6 தொகுதிகளில் 3வது இடம் பிடித்தது நாம் தமிழர் கட்சி.

சின்னம் இல்லை: கரும்பு விவசாயி சின்னம் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருந்த சின்னம் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலை அந்த சின்னத்தின் கீழ்தான் நாம் தமிழர் கட்சி எதிர்கொண்டது. நாம், தமிழர் கட்சியின் நிரந்தர சின்னம் ஆகிவிடும் என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் நினைத்தனர்.

சின்னம் போச்சு: ஆனால் அந்த சின்னத்தை லோக்சபா தேர்தலுக்கு முன் நாம் தமிழர் இழந்தது. போதுமான வாக்கு சதவிகிதம் இல்லை . தேர்தலுக்கு முன்பே சின்னத்தை கேட்கவில்லை. முதல் ஆளாக சின்னத்தை கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை என்பதே காரணம். இது காலம் காலமாக இருக்கும் விதிகள். நாம் தமிழர் கட்சி இதை தவறவிட்டது பெரிய அளவில் அந்த கட்சிக்கு எதிராக மாறியது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு கொடுக்கப்பட்டது.

அந்த சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தது. இதில் சில இடங்களில் அவர்களின் வேட்புமனு ஏற்கப்படவில்லை. கிட்டத்தட்ட 15 இடங்களில் அவர்கள் போட்டியிட, மற்ற இடங்களில் அந்த சின்னம் சுயேட்சை சின்னம் ஆனது.

இந்த நிலையில்தான் மைக் சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+