லோக்சபா தேர்தலில் கூட்டணியா? வாய்ப்பே இல்ல ராஜா! தனித்து தான் போட்டி.. சீமான் திட்டவட்டம்
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்றும் சீமான் கூறியுள்ளார். மேலும், அதிமுக - பாஜக கூட்டணி முறிவை நிரந்தர பிரிவாக பார்க்கிறேன் என்றும் சீமான் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியை முறிப்பதாக அதிமுக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த லோக்சபா தேர்தலை மற்றும் சட்டசபை தேர்தலை ஒன்றாக சந்தித்த அதிமுக - பாஜக கூட்டணி நேற்று முறிநததாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களுக்கு எதிராக பேசி வந்ததால், அதிமுகவின் முன்னாள் தலைவர்களை இகழ்ந்து பேசி வந்ததால் இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டதாக அதிமுக கூறியது.

அதிமுக- பாஜக கூட்டணி முறிவதற்கு அண்ணாமலை பேச்சு, அண்ணாமலையை நீக்க அதிமுக வைத்த கோரிக்கையை பாஜக ஏற்றுக்கொள்ளாதது, லோக்சபா தேர்தலில் பாஜக 20 இடங்களை கேட்டது. இவை எல்லாம் கூட்டணி உடைவதற்கு முக்கியமான காரணங்களாக பார்க்கப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததை சீமானும் வரவேற்று இருந்தார். இதனால் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க எடப்பாடி முயற்சி செய்யலாம்.
சீமானும் எடப்பாடியை பெரிதாக கடிந்து பேசியது இல்லை. இதையெல்லாம் வைத்து அதிமுகவுடன் நாம் தமிழர் கூட்டணி வைக்கலாம் என்று கூட சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் பேச தொடங்கினர். இந்த நிலையில், தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். அண்ணாமலை நடைபயணம் சரிவராததால் அவர் இடை நிறுத்திவிட்டார். அண்ணாமலைக்கு தற்போது நடப்பதற்கு நேரம் இல்லை. யாரை சேர்த்து கூட்டணியை வழி சேர்க்கனும் என்ற நிலைதான் உள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவை நிரந்தர முடிவாக பார்க்கிறேன்" என்றார். அப்போது தமிழர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிப்பீர்களா என்று சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சீமான், சிதம்பரம் இருக்கிறார் அல்லவா... அவரை நீங்கள் தமிழராக ஏற்பீர்களா எப்படி? அதிக செல்வாக்கு பெற்ற மூப்பனாரும் சிதம்பரமும் இந்திய அமைதிப்படையை அனுப்பும் போது அதை பேசி இவர்கள் தடுத்து இருக்கலாம்.
தயவு செய்து செய்ய வேண்டாம் என்று... ராஜிவ் - ஜெயவர்தனே ஒப்பந்தத்தில் தமிழ் இனம் மிகப்பெரிய பின்னடவை சந்திக்க போகிறது என்று தடுத்து இருக்கலாம். எவ்வளவோ வேலைகளை செய்து இருக்கலாம். என் இனம் சாகும் போது இந்த தலைவர்கள் மவுனம் காத்து நிற்கும் போது... தமிழனாய் பிறப்பவன் எல்லாம் தமிழன் இல்லை.. எவன் தமிழுக்கும் தமிழருக்கும் இறுதி வரை நின்று போராடுகிறானோ அவன் தான் தமிழன். தமிழர் மீட்சியே தமிழர் எழுச்சி என்ற கோட்பாட்டை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா... இவ்வாறு அவர் கூறினார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications