தமிழக தொல்லியல் துறையில் தானே வேலை..அதற்கு சமஸ்கிருதம் எதற்கு? இதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் 'சமஸ்கிருதம்’ தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நேற்று நேர்முக தேர்வுகள் அல்லாத பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதில் தொல்லியல் துறையின் உதவி காப்பாட்சியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் சம்ஸ்கிருத அறிவு பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தமிழ் ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தொல்லியல்துறை தொழில்நுட்பப் பணியாளர் தேர்வுக்கான புதிய அறிவிக்கையில் 'சமஸ்கிருதம்’ தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சமஸ்கிருதம் தெரிந்திருப்பதுதான் தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய ஒரே தகுதியா? தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? தமிழ்நாட்டின் தொல்லியலை அறிய தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமா அல்லது சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இத்தகைய அறிவிக்கை யாருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது?
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலின் பேரில்தான் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதா? அப்படியென்றால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதுபோல் உண்மையிலேயே ராமரின் ஆட்சியின் நீட்சிதான் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியா? திராவிட மாடல் என்பது உண்மையிலேயே சமூகநீதியா? அல்லது மனுநீதியா?
அதுமட்டுமின்றி தொல்லியல் பணிக்கு திராவிட மொழி தெரிந்திருக்க வேண்டுமென்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அப்படி ஒரு மொழி இருக்கிறதா? தமிழ்மொழி என்று குறிப்பிடுவதில் தமிழ்நாடு அரசிற்கு என்ன தயக்கம்? என்ன தடை? திராவிட மொழி என்றால் அது எந்த மொழி என்பதை திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முதலில் விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக 6 முறை ஆட்சிக்கு வந்து, 54 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தமிழ்நாட்டின் 'தமிழ்த்தெருக்களில் தமிழ் இல்லையென்று யாரும் கூறக்கூடாது’ என்று ஒரு வெற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ்த்தெருக்களில் தமிழ் வரவே இத்தனை ஆண்டுகாலம் ஆகியுள்ளது, அதுவும் இன்னும் முழுமையாக நிறைவேறியபாடில்லை. அதற்குள் தமிழ்நாடு அரசுப் பணிகளிலிருந்து அன்னைத்தமிழை அகற்ற திமுக அரசு முனைவது பெருங்கொடுமையாகும். இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? 'எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!', 'வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!' என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெற்று முழக்கங்கள் என்பது இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிறுவப்பட்டுள்ளது.
ஆகவே, தமிழ்நாடு தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அறிவிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழில் புலமை பெற்றிருக்க வேண்டுமென்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” என கூறியுள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications