அமித்ஷாவுக்கு எழுதிய கடிதம்.. “மத்திய அரசு ஆர்டிகிள் 356-ஐ பயன்படுத்த போவதில்லை” - நயினார் விளக்கம்!
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். "மத்திய அரசு அரசியலமைப்பு சட்டம் 356-ஐ பயன்படுத்த போவதில்லை. இந்த ஆட்சிக்கு 90 நாள் தான் உள்ளது. அதனால் சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்த மக்கள் தயாராகி விட்டார்கள். தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் வரும்." எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழ்நாட்டில் தொடர்ச்சியான வன்முறை மற்றும் கொடூரச் சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்-ஒழுங்கு மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியிறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக விளக்கம் அளித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், "தமிழகத்தில் தினசரி கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதி நவீன போதை பொருள் புழக்கம் தமிழகத்தில் உள்ளது. கையில் புத்தகம் ஏந்தி கல்வி நிலையம் செல்லும் வயதில் அரிவாள் தூக்கும் நிலையில் உள்ளது.
அதனால் தான் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு அரசியலமைப்பு சட்டம் 356-ஐ பயன்படுத்த போவதில்லை. இந்த ஆட்சிக்கு 90 நாள் தான் உள்ளது. அதனால் அரசியலமைப்பு சட்டம் 356 ஐ மக்கள் கையில் எடுத்துள்ளார்கள். சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்த மக்கள் தயாராகி விட்டார்கள். தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் வரும்." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதிய கடிதத்தில், "சமீபகாலமாக தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் தொடர்ச்சியான வன்முறை மற்றும் கொடூரச் சம்பவங்களால் மிகவும் மோசமடைந்து வரும் சட்டம் - ஒழுங்கு நிலைமையை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். கோயம்புத்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சூரஜ் (22 வயது) என்பவர், ஆட்டோ ரிக்ஷா தொடர்பான தகராறில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாஜித் கான் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரால் 2025 டிசம்பர் 28 அன்று தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி 2025 டிசம்பர் 30 அன்று உயிரிழந்தார்.
மேலும், 2025 டிசம்பர் 29 அன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி இரயில் நிலையத்தில், ரீல்ஸ் (reels) எடுப்பதைத் தடுத்ததற்காக, கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களால் மற்றொரு புலம் பெயர் தொழிலாளி கொடூரமாகத் தாக்கப்பட்டார். 2025 டிசம்பர் 30 அன்று அதே ரயில் நிலையத்தில், மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்கள் ஒரு பயணியை மிகக் கொடூரமாகத் தாக்கிய மற்றொரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தச் சம்பவங்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதையும், இளைஞர்களிடையே பெருகி வரும் போதைப்பொருள் பழக்கத்தையும், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு இயந்திரத்தின் தோல்வியையும் தெளிவாகக் காட்டுகின்றன. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் தெரிவிக்கும் இன ரீதியான கருத்துக்கள் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கை உருவாக்கியுள்ளன. இதுமட்டுமின்றி, கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் மற்றும் கல்வி நிறுவனங்களின் போர்வையில் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுபவர்களின் கைது போன்ற நிகழ்வுகள், மாநிலத்தின் உட்புறப் பாதுகாப்பு சவால்களைப் பறைசாற்றுகின்றன.
அடிக்கடி நிகழும் கொள்ளைச் சம்பவங்கள், முதியவர்கள் கொலை, பட்டப்பகலில் அரங்கேறும் கொலைகள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் நிலைமையின் தீவிரத்தை மேலும் உணர்த்துகின்றன. மேற்கூறிய நிகழ்வுகள் மற்றும் சீர்குலைந்து வரும் சட்டம் - ஒழுங்கு சூழலால், பொதுமக்களும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற நலிவடைந்த பிரிவினரும் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்- ஒழுங்கு மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும் தாங்கள் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
தேர்தலுக்கு 10 நாள் கூட இல்லை.. அமித் ஷா கைகளுக்கு போன முக்கியமான ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் மம்தா -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம்












Click it and Unblock the Notifications