யாதும் ஊரே யாவரும் கேளிர்! விஜய் சேதுபதியை பாராட்டி ரிவ்யூ கொடுத்த நல்லகண்ணு! என்ன சொன்னார் தெரியுமா
சென்னை: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இவர் மறைந்த இயக்குநர் ஜனநாதனின் உதவி இயக்குநர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாத மேகா ஆகாஷ் நடித்துள்ளார்,

மோகன் ராஜா, மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்த நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை பார்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பாராட்டியுள்ளார்.
அந்த ப்ரிவியூ விழாவில் அவர் பேசுகையில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நமது தமிழ் இலக்கியத்தில் முதல் வரி. இன்று உலகத்தில் ஐக்கிய நாடு சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுதான் போடப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழுக்குரிய பெருமையை தமிழ் இலக்கியத்திற்குரிய பெருமையை அடையாளம் காட்டியிருக்கிறது.
இந்த மகிழ்ச்சியிலேயே படத்தை பார்க்க வேண்டும் என முடிவுக்கு வந்தேன். விஜய் சேதுபதியும் படக்குழுவினரும் நல்ல முயற்சி எடுத்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள சமூகங்கள் மாறிக் கிடக்கின்றன. இன்று இலங்கையில் உள்ள பிரச்சினையை தமிழ்நாட்டில் பேசுகிறார்கள். அது போல் தமிழகத்தில் உள்ள பிரச்சினையை வெளி உலகத்தில் பேசுகிறார்கள்.
இப்படி பிரண்டு கிடக்கும் ஒரு சமூகத்தை ஒரு இசையிலோ அல்லது கருத்தாலோ ஒன்று சேர்க்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கிய படம் என்ற முறையில் இந்த படத்தை பாராட்டுகிறேன் என பேசியிருந்தார். நில அரசியலை மையமாக வைத்து படமாக்கப்பட்டு இருக்கிறதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெகுவாக பாராட்டியிருந்தார். படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications