நமிதாவுக்கு ரெட் கார்டா?.. வெள்ளி அன்று வன்முறையில் ஈடுபட்டாரா?.. உண்மை இதுதான்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் தாமரைச் செல்வியிடம் கோபமடைந்து அங்கிருந்த பொருட்களை வீசி ஆவேசமடைந்ததால் நமிதா மாரிமுத்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் முற்றிலும் தவறானது என்றும் அவர் வெளியேறியதற்கு தாமரை உள்பட எந்த போட்டியாளரும் காரணமில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஸ்டிராங் கன்டெஸ்டென்ட்டாக சிலரை பிரபலமானதன் அடிப்படையில் சொல்ல முடியும். இன்னும் சிலரது நடவடிக்கைகளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பார்த்து வரும்போது தெரியவரும்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட 3ஆவது நாளிலேயே மக்களிடம் அந்த அளவுக்கு பிரபலமடையாமல் இருந்த நமிதா மாரிமுத்து டைட்டில் வின்னர் என்ற அளவுக்கு பேசப்பட்டார். எல்லாவற்றிற்கும் காரணம் அந்த கதை சொல் எனும் டாஸ்க்தான்.

காரணங்கள் தெரியவில்லை
அவரது கதையை கேட்ட நேயர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவை கொடுத்து வந்தார்கள். இந்த நிலையில் அவர் திடீரென சில தவிர்க்க முடியாத காரணங்களால் போட்டியிலிருந்து வெளியேறியதாக பிக்பாஸ் தெரிவித்தார். இது ஏன் என இதுவரை காரணங்கள் தெரியவில்லை. நமிதாவுக்கு தாமரைச் செல்விக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் நமிதா வெளியேறிவிட்டதாக பேசப்படுகிறது.

இணையதளத்தில் வைரல்
இந்த நிலையில் அவரது வெளியேற்றம் குறித்து இணையதளத்தில் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதில் 6ஆம் நாள் காலை 4 மணிக்கு நமிதா தாமரைச் செல்வியை எழுப்பி பேசினார். அப்போது நமிதா கூறுகையில் நா உங்ககிட்ட பேசினதை யார்கிட்டயும் சொல்லிராதீங்க என்றார். அன்றைய தினம் மதியம் தாமரை இரு போட்டியாளர்களிடம் நமிதா பேசியதை தெரிவித்தாராம்.

தாமரையால் கோபம்
இது நமிதாவுக்கு தெரியவந்ததை அடுத்து வெளியே சொல்ல வேண்டாம் என சொல்லியும் தாமரை சொல்லிவிட்டாரே என கோபம் ஏற்பட்டதாம். இதனால் அந்த கோபத்தில் அவர் என்ன செய்கிறார் என தெரியாமல் அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாகவும் நமிதாவுக்கு வெளியே நற்பெயர் இருப்பதாலும் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடாது என்பதாலும் வெள்ளிக்கிழமை நடந்தவற்றை விஜய் டிவி ஒளிபரப்பவில்லை என கூறப்படுகிறது.

யாரும் காரணமில்லை
இது முற்றிலும் தவறானது தகவல் மற்றும் போலியான செய்தி என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்படியே மேற்கண்டவாறு சண்டை நடந்திருந்தால் அதை ஒளிபரப்ப விஜய் டிவி ஏன் தயங்க வேண்டும். அந்த சண்டை உண்மையில் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டை அதிகரிக்குமே. எனவே நமிதா வெளியேறியதற்கு யாரும் காரணமில்லை. அவராகவே தனிப்பட்ட காரணங்களால் வெளியேறிவிட்டார் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் நமிதா வெளியேறியதற்கு தாமரைச் செல்விக்கோ மற்ற போட்டியாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications