Nanjil Sampath: விஜய் அனுபவம் குறைந்தவர்.. குறை உள்ளது.. நாஞ்சில் சம்பத் தடாலடி பேச்சு
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகின்றன. தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடு சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில் அந்தக் கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத், எங்கள் தலைவர் அனுபவம் குறைந்தவர். அவரின் செயல்பாடுகளில் குறை உள்ளது என்று பேசியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத், "தமிழ் சினிமாவிற்கு உலக அங்கீகாரம் கிடைக்கும் என்றால் அதை கமல்ஹாசன் வாங்கி தருவார் என்று நம்பியவன் நான். தொலைக்காட்சி பெட்டியை உடைத்தார். திமுக மீது தீரா கோபத்தை வெளிப்படுத்தினார். கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயரிட்டார் [Nanjil Sampath].

கமல், ரஜினி மீது விமர்சனம்
தற்போது அந்தக் கட்சி அறிவாலயம் வாசலில் இப்போது சாகுமா, எப்போது சாகுமா என இழுத்துக் கொண்டிருக்கிறது.திமுக, அதிமுகவுக்கு மாற்றம் என்று வேகமாக புறப்பட்டவர்கள் எல்லாம் பாதியிலேயே முடங்கிவிட்டனர். சிலபேர் அடங்கிவிட்டனர். ஆன்மிக அரசியல், லேட்டாக வந்தாலும்.. லேட்டஸ்டாக வருகிறேன் என்று சொன்னார் சூப்பர் ஸ்டார்.
அவர் அரசியலுக்கே வரவில்லை. சூப்பர் ஸ்டாரால் முடியாததை எங்கள் ஸ்டார் விஜய் செய்துள்ளார். இந்தக் கூட்டம் ஓட்டாக மாறுமா என சீட்டாடும் சின்ன பையன் எல்லாம் கேட்கிறார்கள். இது ஓட்டாக மட்டுமல்ல, வேட்டாகவும் மாறும் என்பதை நாங்கள் நிரூபிப்போம். எங்கள் தலைவர் அனுபவம் குறைந்தவர் தான்.
விஜய் மீது குறை
அவரிடம் குறை இருக்கிறதா என்றால் குறை இருக்கிறது என இந்த சபையிலேயே கூறுகிறேன். நீரில் பாசி இல்லையா, நிலவில் கலங்கம் இல்லையா அதேபோல தான் இதுவும். அதற்காக எங்கள் தலைவரின் வருகை இவர்களை ஏன் ஆத்திரப்படுத்துகிறது. ஏன் நிதானம் இழந்து பேசுகிறார்கள். ஏன் தனி மனித விமர்சனங்களை முன்னெடுக்கிறார்கள்.
ஏன் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகிறீர்கள். திருப்பி எறிந்தால் தாங்குவீர்களா. மிக மோசமான.. மட்டமான அரசியலை கையில் எடுத்துள்ளனர். இது அநியாயமாக உள்ளது. எங்களின் அணுகுமுறையை தவறு இருந்தால் சொல்லுங்கள். அண்ணன் ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு ஏதோ பொறுப்பு கொடுக்க போவதாக சொல்கிறார்கள். ஓபிஎஸ் இந்த இமாலய தவறை செய்திருக்க கூடாது" என்றார்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications