Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இடிப்பாரை இல்லாத.." கனிமொழி சொல்றதும் சரிதான்! தமிழ் தெரியாததற்கு யார் காரணம்? நாராயணன் கேள்வி

வடஇந்தியர்களுக்கு தென்னிந்திய மொழி தெரியாததற்கு யார் காரணம் என கனிமொழி எம்பிக்கு பாஜக நாராயணன் கேள்வி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் இந்திய மொழிகள் எப்படி வடஇந்தியர்களுக்கு புரியும்? அதுதான் மும்மொழி கொள்கையை திமுகவும் காங்கிரஸும் எதிர்க்கிறீர்களே என பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்பிக்கள் பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பேசினார். அவர் பேசுகையில் பாஜக ஒரே நாடு, ஒரே வரி, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே கட்சி என்ற ஒற்றையாட்சி கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நடக்காது.

27 முறை கூட்டத் தொடர்

27 முறை கூட்டத் தொடர்

இந்த அரசு ஆட்சிக்கு வந்து 27 முறை நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியிலும் சட்டசபை, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இந்த மசோதா இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றார். மேலும் கனிமொழி எம்பி பேசுகையில் இந்த ஆண்டு தமிழகத்திற்கு தேர்தல் நடக்காததால் குடியரசுத் தலைவர் உரையில் திருக்குறளை கூட மறந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால் நான் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

கெடுப்பார் இலானும் கெடும்

கெடுப்பார் இலானும் கெடும்

என்ற திருக்குறளை கனிமொழி வாசித்தார். அப்போது சில எம்பிக்கள் புரியவில்லை, மொழிபெயர்க்க வேண்டும் என கூச்சலிட்டனர். அதற்கு கனிமொழி, நீங்கள் (வட இந்திய எம்பிக்கள்) தென் இந்திய மொழிகள் எதையும் கற்பதற்கு முயற்சிக்க கூட இல்லை என்றும், ஹிந்தியை தென் இந்திய மக்களின் மீது திணிப்பதற்கு மட்டுமே முயற்சித்தீர்கள் என கூறி அதற்கான விளக்கத்தையும் ஆங்கிலத்தில் அளித்தார்.

பாஜக துணைத் தலைவர் பதில்

பாஜக துணைத் தலைவர் பதில்


இதற்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். அவர் தனது ட்வட்டரில் கூறுகையில் இடிப்பாரை இல்லாத ஏமாரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

என்ற திருக்குறளை திருமதி. கனிமொழி இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டு, நீங்கள் (வட இந்தியர்கள்) தென் இந்திய மொழிகள் எதையும் கற்பதற்கு முயற்சிக்க கூட இல்லை என்றும், ஹிந்தியை தென் இந்திய மக்களின் மீது திணிப்பதற்கு மட்டுமே முயற்சித்தீர்கள் என்றும், தென் இந்திய மொழிகள் உங்கள் யாருக்கும் புரியவில்லை என்றும் கூறியது சரியே.

காரணம் யார்

காரணம் யார்

ஆனால், அதற்கு காரணம் யார்? காங்கிரஸ் கட்சியே. எப்படி? மும்மொழி கொள்கை என்பது ஹிந்தி பேசும் மாநில மக்கள், ஆங்கிலம் உட்பட தென் இந்திய மொழி ஒன்றை கற்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசாத மாநில மக்கள், தாய் மொழி மற்றும் ஆங்கிலம் உட்பட ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே கொண்டு வரப்பட்டது. அதை முறையாக செயல்படுத்தியிருந்தால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ளவர்கள், தென் இந்திய மொழி ஒன்றினை கற்றிருப்பார்கள். ஹிந்தி பேசாத மாநில மக்கள் ஹிந்தி மொழியை கற்றிருப்பார்கள். ஆனால், மற்ற மொழிகளை கற்க காங்கிரஸ் அரசும், திராவிட மாடல் அரசுகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

காங்கிரஸ் தென் இந்திய மொழிகள்

காங்கிரஸ் தென் இந்திய மொழிகள்

அறுபது வருடங்களுக்கு மேல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தென் இந்திய மொழிகளை வட இந்தியர்கள் கற்றுக் கொள்வதற்கு எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், மூன்று தலைமுறையினரை கெடுத்து குட்டி சுவராக்கிய பெருமை காங்கிரஸ் மற்றும் தி மு கவினரையே சாரும். எங்கள் தமிழை இந்தியா முழுவதும் கற்று கொடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியதற்கு ஆதாரம் உள்ளதா? மூன்றாவது மொழியாக தென் இந்திய மொழிகளை கற்க வேண்டும் என காங்கிரஸ் அரசு வலியறுத்தியதற்கு ஆதாரம் உள்ளதா?

இந்தி பேசும் மொழிகள்

இந்தி பேசும் மொழிகள்

ஆனால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மூன்றாவது மொழி ஒன்றை கற்று தர வேண்டும் என்று பாஜக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள பள்ளிகள் ஹிந்தி கற்று கொடுக்க வேண்டும் என்றும், தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தி வருகிறது. இதை முன்னெடுத்து தமிழக அரசு, தமிழ் மொழியை இந்தியா முழுவதும் பரப்புவதற்கான திட்டமிடுதலை செய்திருக்கிறதா? தேமதுரத் தமி‌ழ் ஓசை உலகமெலாம் (குறைந்தது இந்தியாவில்) பரவும் வகை செய்தல் வேண்டும் என்று பாடிய மகாக‌வி பார‌தியா‌ரின் கனவை நனவாக்கும் முயற்சியை மேற்கொண்டதா திராவிட முன்னேற்ற கழகம்?

 மூன்று தலைமுறை

மூன்று தலைமுறை

ஒட்டு மொத்தமாக மூன்று தலைமுறை இந்தியர்களை தமிழை கற்க விடாமல் செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை வைத்து கொண்டு தி மு கவின் கனிமொழி அவர்கள் பேசுவது வெட்கக்கேடு மட்டுமல்ல, தமிழ் மொழிக்கு செய்யும் மாபெரும் துரோகமும் கூட. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு இன்று தமிழ் பெருமை பேசுவது முறையா கனிமொழி அவர்களே?

தேசிய கல்வி கொள்கை

தேசிய கல்வி கொள்கை

தேசிய கல்வி கொள்கையில் தாய் மொழிக்கே அதிக முன்னுரிமை அளிப்பது பாஜக! அதை ஏன் எதிர்க்கிறது திமுக? தமிழ் மொழி இந்தியா முழுவதும் பரவி விடக்கூடாது என்று ஏன் திமுக நினைக்கிறது? மலிவான மொழி அரசியல் இது தானே? நம் தமிழ் மொழியை விட காங்கிரசின் கூட்டணி தான் முக்கியம் என்ற குறுகிய நோக்கம் கொண்டது தானே திமுக? இவ்வாறு பாஜக நாராயணன் திருப்பதி தனது தொடர் ட்வீட்டுகள் மூலம் கனிமொழிக்கு பதில் கொடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+