அன்று ‘கப்சிப்’.. இப்ப மட்டும் ஏன் ஓலமிடுறீங்க? திமுக எங்க போச்சு? ‘லிஸ்ட்’ போட்ட பாஜக நாராயணன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், 4 நிகழ்வுகளைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வரும் மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

Narayanan thirupathy slams opposition parties on new parliament inauguration controversy

பிரதமர் மோடிக்கு பதிலாக நாடாளுமன்றத்தின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டும். அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும், இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தவர்கள் அன்றைக்கு பிரதமராக இருந்தவர்கள் தான், தமிழ்நாட்டில் புதிய தலைமைச் செயலகத்தை திறந்து வைத்தவர் அன்றைய பிரதமர் தான் எனக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி.

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கலாமா? அது முறையா? குடியரசுத் தலைவர் தானே திறந்து வைக்க வேண்டும் என்று புலம்பிக்கொண்டிருக்கின்றனர் எதிர்க்கட்சியினர். நாடாளுமன்றத்தில் இரு அவைகளுக்கும் தலைவர் குடியரசுத் தலைவரே என்றும், நாடாளுமன்ற அவைகளின் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் குடியரசுத் தலைவரே என்றும் பழங்குடியினத்தவர் என்பதால் தான் ஓதுக்கிறார்கள், அவமானப்படுத்திகிறார்கள் என்று மலிவான அரசியலை முன்வைத்து, இது வரை யாருக்கும் தெரியாத ஒன்றை தெரிவிப்பது போல் அறிக்கை விட்டு கொண்டிருக்கின்றனர்.

Narayanan thirupathy slams opposition parties on new parliament inauguration controversy

1975ம் ஆண்டு பாராளுமன்ற கட்டிடத்தை (Annexe) திறந்து வைத்தவர் இந்திரா காந்தி தானேயன்றி, அன்றைய குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது அல்ல. இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தான் பக்ருதீன் அலி அகமது அவர்களை ஒதுக்கி, அவமானப்படுத்தியதா காங்கிரஸ்?

1987ஆம் ஆண்டு பாராளுமன்ற நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியது அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் தானேயன்றி, அன்றைய குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் அல்ல. தமிழர் என்பதால் தான் ஆர்.வெங்கடராமன் அவர்களை ஒதுக்கியதா காங்கிரஸ்?

கடந்த திமுக ஆட்சியில், மார்ச் 13,2010-ஆம் ஆண்டு ஓமந்தூரார் மாளிகையில் புதிய தமிழக சட்ட சபை கட்டிடத்தை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் திறந்து வைத்தார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டுமென்றால், புதிய சட்டசபை கட்டிடத்தை, சட்ட மன்றத்தின் தலைவர் அன்றைய ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் தானே திறந்திருக்க வேண்டும்?

பிரதமரும், காங்கிரஸ் கட்சி தலைவரும் எதற்கு அழைக்கப்பட்டார்கள்? அன்று ஒரு பெண் குடியரசுத் தலைவரையும், சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த ஆளுநரையும் அவமானப்படுத்தியது ஏன் என்று திமுக விளக்குமா?

Narayanan thirupathy slams opposition parties on new parliament inauguration controversy

தெலுங்கானாவில் புதிய சட்டசபை மற்றும் புதிய தலைமை செயலகத்தை அந்த மாநிலத்தின் முதல்வரே திறந்து வைத்ததோடு, அரசியலமைப்பு சட்டப்படி அம்மாநிலத்தின் தலைவரான ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை அழைக்காது இருந்த போது வாய் மூடி மௌனம் காத்தவர்கள், இப்போது பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்கிறார் எனும் போது மூடிய வாயை திறந்து ஓலமிடுவது ஏன்?

ஒரு பெண், அதிலும் ஒரு தமிழர் என்பதால் தான் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை ஒதுக்கி, அவமானப்படுத்தியதா அம்மாநில அரசு என்று எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்காதது ஏன்? எது நடைமுறையோ அதை முறையே செய்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி அரசு.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கேலி பேசிய எதிர்க்கட்சிகள், குறை சொன்ன எதிர்க்கட்சியினர், பிரதமருக்கு புதிய இல்லம் கட்டுகிறார் என்று கதைவிட்டுக் கொண்டிருந்த மலிவான அரசியல்வாதிகள் இன்று பொழுது போகாமல் பொங்கியெழுந்து அரசியலமைப்பு சட்டம் குறித்து நமக்கு பாடம் எடுப்பது விந்தையிலும் விந்தை.

தங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு அநியாயம் என்ற அக்கப்போர் அரசியலை கைவிட்டு ஆக்க பூர்வ அரசியலை முன்னெடுப்பதே எதிர்க்கட்சிகளுக்கு சிறப்பை தரும்" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+