சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு தேசிய விருது.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
சென்னை: மத்திய அரசு சார்பில், நகர்ப்புற போக்குவரத்து திறன் விருது வழங்கும் நிகழ்ச்சியில், நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதான 'நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை' மத்திய அரசு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கியுள்ளது. விருது பெற்றுள்ள எம்டிசி சென்னைக்கும், துறையை சிறப்பாக வழிநடத்தி வரும் அமைச்சர் சிவசங்கருக்கும் முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநிலம், குருகிராமில் மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், 'இந்திய நகா்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சி 2025' நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நாட்டிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என்ற பிரிவில் தேசிய விருதை செந்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது.

மத்திய நகா்ப்புற வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டாா், இணை அமைச்சா் டோகன் சாஹூ ஆகியோா், நகா்ப்புறப் போக்குவரத்து திறன் விருதை தமிழக போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்காிடம் வழங்கினர். சென்னை மாநகரப் போக்குவரத்து மேலாண் இயக்குநா் டி.பிரபுசங்கா் உடனிருந்தார்.
தேசிய பொது போக்குவரத்து அட்டை, மின்சார பேருந்து வசதி மலம் மாசுபாட்டை குறைத்தது, பள்ளி மாணவா்களுக்கான சிறப்பு பேருந்து சேவை உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளுக்காக இந்த தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, இந்த விழாவில் சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரயில் எனும் பிரிவின் கீழ், நகா்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பயணிகள் சேவை மற்றும் மனநிறைவு அளிக்கும் மெட்ரோ ரயில் பிரிவில், நகா்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழ் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில், நமது திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகளான விடியல் பயணம், சென்னை மாநகர பள்ளிகளுக்கான பிரத்யேக பேருந்து வசதி, சென்னை ஒன் செயலி, ஒருங்கிணைந்த டிக்கெட் போன்ற திட்டங்கள் இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதல்வரின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள எம்டிசி சென்னைக்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் அமைச்சர் சிவசங்கருக்கும் பாராட்டுகள்!
நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், Digital பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications