நயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்.. எந்த உள்நோக்கமும் இல்லை.. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்!
சென்னை: நடிகை நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது என்றும், அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் அதிமுக எம்பி சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் பெயர் முற்றிலும் தவறுதலாகவே பயன்படுத்தப்பட்டுவிட்டது என்றும், அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
என்டிஏ கூட்டணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈழுபட்டனர். அந்த வகையில் விழுப்புரத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவி சண்முகம் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த "உங்க கனவை சொல்லுங்க" என்ற திட்டத்தை கடுமையாக விமர்சித்தார். அதில் சிவி சண்முகம் பேசுகையில், அப்துல் கலாம் அனைவரையும் கனவு காணுங்கள் என்று கூறினார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேல் சென்று "உங்க கனவை சொல்லுங்க" என்கிறார்
ஆமா.. எனக்கு நயன்தாரா வேண்டும்.. கனவை நிறைவேற்றுவாரா?.. நயன்தாராவை கல்யாணம் பண்ணி வை என்று கேட்பான்.. செய்து வைப்பாரா? என்று பேசினார். சிவி சண்முகத்தின் இந்த பேச்சு சர்ச்சையாகியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். சிபிஎம் கட்சி சார்பாக பாலபாரதி, சிவி சண்முகம் நடிகையின் பெயரை சொல்லி இருக்க கூடாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிலையில் அதிமுக எம்பி சிவி சண்முகம் நயன்தாரா தொடர்பான பேச்சிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் நயன்தாராவின் பெயர் தவறுதலாக உச்சரிக்கப்பட்டது. அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். முற்றிலும் தவறுதலாகவே வார்த்தை பயன்படுத்தப்பட்டது. எந்தவிதமான உள்நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஆர்ப்பாட்டத்திலேயே சிவி சண்முகம் இப்படி பேசியது பல்வேறு தரப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷாவை விஜய்யுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையான சூழலில், ஆதவ் அர்ஜுனா ரஜினி தொடர்பாக பேசி சிக்கலில் மாட்டியுள்ளார். இதையடுத்து சிவி சண்முகம் நயன்தாரா பெயரை சொல்லி சிக்கி இருக்கிறார்.
-
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications