ஒரு நியாயம் வேணாமா? நயன்தாரா கேட்ட சம்பளத்தால் மயக்கம் போட்ட புரொடியூசர்.. இந்த நடிகருக்கு ஜோடியா?
சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக மாறி இருக்கிறார். இந்த நிலையில் மூத்த நடிகர் ஒருவருடன் நடிப்பதற்கு அவர் கேட்ட சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர் தரப்பே மயக்கம் போட்டு விழாத குறைதானாம். தற்போது அவரது சம்பளத்தை குறைக்க வேண்டுமென பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் நயன்தாராவை தான் ஹீரோயினாக போட வேண்டும் என்பதிலும் படக்குழு உறுதியாக இருக்கிறதாம்.
தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, உள்ளிட்ட படங்களில் ஹீரோயின் ஆகி இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. தமிழில் விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், சிம்பு, அஜித், ஜெயம் ரவி என சீனியர் ஜூனியர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானார்.
பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகரான தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்திருந்த நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருமே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதனால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த 2022 ஜூன் மாதம் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், முக்கிய நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சொல்லப்போனால் தமிழகம் முழுவதுமே நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த பேச்சுகள் தான் எங்கு பார்த்தாலும் நிறைந்திருந்தது. அதே நேரத்தில் அப்போதிலிருந்தே சில சர்ச்சைகளும் நயன் - விக்கி தம்பதியை சுற்றிச் சுழன்றாலும் அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் உலக டூர் சென்ற தம்பதி பின்னர் சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் உள்ளது இந்த ஜோடி.
இதற்கிடையே சினிமாவிலும் தனது கவனத்தை செலுத்தினார் நயன்தாரா. அவரை முன்னிலைப்படுத்தி வெளியான திரைப்படங்கள் மண்ணைக் கவ்விய நிலையில் மீண்டும் பிரபல ஹீரோக்களுக்கு தூது விட்டார். அந்த வகையில் அட்லியின் தயவால் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் சீனியர் நடிகர்கள் தங்கள் படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என கேட்டு வருகின்றார்.
அப்படி கேட்டவர் தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தின் இயக்குனரான அணில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவியின் 157 வது படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சுஷ்மிதா கனிபேலாவின் கோல்ட் பாக்ஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனமும் ஷைன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் முதற்கட்ட வேலைகள் முடிவடைந்திருக்கும் நிலையில் விரைவில் இந்த குழு சூட்டிங் புறப்பட உள்ளது.
இந்த நிலையில் தான் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தற்போது தான் பான் இந்தியா நடிகையாக வளர்ந்து விட்ட நிலையில் 18 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என நயன்தாரா கேட்டாராம். சிரஞ்சீவிக்கு கூட அவ்வளவு சம்பளம் இருக்குமா என தெரியவில்லை, நயன்தாரா இவ்வளவு கேட்கிறாரே என படக்குழு மயக்கம் போடாத குறைதானாம். இந்த நிலையில் சிரஞ்சீவி அந்தப் படத்திற்கு நயன்தாரா தான் சரியாக இருப்பார் எனக் கூற தற்போது பட குழு அவரிடம் சம்பளத்தை குறைக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே காட் பாதர், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications