மாமியார், மாமனாரை கவனிக்காத கமீலா நாசருக்கு ஓட்டு போடனுமா?.. யோசியுங்கள்.. நாசர் தம்பி பரபர வீடியோ!
Recommended Video

சென்னை: மாமியார், மாமனாரை கவனிக்காத கமீலா நாசருக்கு நீங்கள் வோட்டு போட வேண்டுமா என்பதை யோசியுங்கள் என நாசரின் தம்பி பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மத்திய சென்னையில் கமீலா நாசர் போட்டியிடுகிறார். திமுகவின் தயாநிதிமாறன், பாமகவின் சாம்பால் ஆகியோருக்கு மத்தியில் கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார் கமீலா நாசர்.
இந்த நிலையில் கமீலா நாசரின் மைத்துனர் ஜவகர் ஒரு பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் நடிகர் நாசரின் தம்பி ஜவகர். அவர் மிகப் பெரிய நடிகர்.

அறிமுகம் இல்லை
அவர் நல்ல நிலையில் இருக்கும் போது கூட தனது அம்மா, அப்பாவை அவர் கவனித்ததே இல்லை. ஒரு 25 ஆண்டுகளாக தனது அம்மா, அப்பா உயிரோடு இருக்கிறார்களா, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையா என இதுவரை எட்டி பார்த்தது கூட கிடையாது. நாசர் தனது பிள்ளைகளை கூட எங்களுக்கு அறிமுகப்படுத்தியது கிடையாது. அவர் நல்ல நிலையில் இருக்கும் போது கூட தனது அம்மா, அப்பாவை அவர் கவனித்ததே இல்லை. ஒரு 25 ஆண்டுகளாக தனது அம்மா, அப்பா உயிரோடு இருக்கிறார்களா, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினையா என இதுவரை எட்டி பார்த்தது கூட கிடையாது. நாசர் தனது பிள்ளைகளை கூட எங்களுக்கு அறிமுகப்படுத்தியது கிடையாது.

அறிவாளியா பேசும் நாசர்
இந்த 25 ஆண்டுகளில் அவர்கள் 2 அல்லது 3 தடவை மட்டுமே தாத்தா, பாட்டியை காண வந்திருப்பர். அதன்பின்னர் இதுவரை அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பது கூட எங்களுக்கு தெரியாது. மேடையில் பேசும் போது மட்டும் ஊருக்கு உபதேசம் சொல்கிறார், நன்றாக பேசுகிறார். இத்தனை அறிவாளியாக பேசும் நாசர் ஏன் இதுவரை அவரது தாய், தந்தையை கவனிக்கவில்லை?

பிரச்சினை
இந்த பிரச்சினையை பற்றி பேசிய போது எனக்கும் அண்ணன் நாசருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இந்த பிரச்சினையை நடிகர் சங்கத்துக்கு கொண்டு சென்றேன். அங்கிருந்த பொறுப்பாளர்கள் நாசர் நல்லவர், வல்லவர் என கூறி எனது பிரச்சினையை கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டனர்.

உதவி
இதனால் மனஉளைச்சல் அடைந்த நான் இதை யாரிடம் சொல்வது என தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். அப்போதுதான் எனது அண்ணி கமீலா மத்திய சென்னையில் கமல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள் என்பது எனக்கு தெரியவந்தது. மாமனார், மாமியார், மனவளர்ச்சிக் குன்றிய ஒரு மகனுக்கு உதவி செய்யாதவர் எப்படி நாட்டு மக்களுக்கு உதவி செய்வார்கள் என்பது என்னுடைய கேள்வி.

செய்தியாளர்களை சந்திப்பேன்
எனவே ஓட்டு போடுவது அனைவரது உரிமை. ஆனால் அந்த வோட்டுக்களை கமீலா நாசருக்கு போட வேண்டுமா என்பதை மத்திய சென்னை தொகுதிக்குள்பட்ட வாக்காளர்கள் ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும். இது சும்மா சாம்பிள்தான். விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன் என்றார் ஜவகர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications