ஆக்சிஜன் தேவையா உடனே 104க்கு கூப்பிடுங்கள் - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்கிற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: தமிழக மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஆக்சிஜன் தேவைப்படுவோர் உடனடியாக 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னையில்கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று 3 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று உறுதியானது. அத்துடன் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 37 பேர் உயிரிழந்தனர்.குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

இதுவரை 1,618 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நிலையில் ஆயிரத்து 104 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 551 நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடனும், 93 பேருக்கு தீவிர ஆக்சிஜன் , 72 பேர் அதிதீவிர ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா அறிகுறி இல்லாமலோ, லேசான காய்ச்சல் உள்ளவர்களோ தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு வரலாம் என்றும் இல்லை என்றால் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் நாளொன்றுக்கு தமிழ்நாட்டில் 400 டன் மற்றும் புதுச்சேரியில் 150 டன் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 1,167 டன் இருப்பு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தற்போதைய தேவை என்பது 250 டன் ஆக மட்டுமே உள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில் ஆக்சிஜன் தேவைப்படுவோர் உடனடியாக 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி உடனுக்குடன் ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் உதவி எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications