"இந்தியை எதிர்க்கலயே.. இந்தி ஆதிக்கத்தையும், திணிப்பையும்தான் கடுமையாக எதிர்க்கிறோம்; உதயநிதி பொளேர்
இந்தி திணிப்பைதான் கடுமையாக எதிர்க்கிறோம் என்று உதயநிதி பேட்டி தந்துள்ளார்
சென்னை: "மதத்தை வைத்து திமுக அரசியல் செய்யவில்லை.. அதனை யார் செய்கிறார்கள் என்று எல்லாருக்குமே தெரியும்.. திமுகவின் எதிர்ப்பு இந்திக்கு இல்லை.. இந்தி ஆதிக்கத்திற்கும், இந்தி திணிப்பிற்கும் தான் எதிர்ப்பு" என்று தெளிவுபடுத்தி உள்ளார் திமுகவின் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் ஆபிசில், திமுகவில் சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் 30 பேருக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.. அதன்பிறகு நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி பேசியதாவது:
"கடந்த 5 மாசத்துக்கு பிறகு உறுப்பினர்களை எல்லாம் சந்திப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.. இளைஞர் அணி பொறுப்பை ஏற்றவுடன் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாம் பயணித்தோம்... அதன் முதல் நிகழ்ச்சி மறைந்த ஜெ.அன்பழகன் அவர்களின் தொகுதியில்தான் நடக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.. அதனாலேயே முதல் உறுப்பினர் சேர்க்கையை அங்கு நடத்தினோம்.

களவீரன்
ஆனால், அவரையும் கொரோனோவால் நாம் இழந்துவிட்டோம்.. போர்க்களத்தில் கள வீரனை இழந்து நிற்கிறோம்... ஜெ.அன்பழகன் விட்டு சென்ற இடத்தை அவரின் மகன் சிற்றரசு நிரப்புவார் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உள்ளது.. கொரோனோ களத்தில் முன்னின்று செயல்பட்டது திமுக தான்.. தேர்தலுக்கு இன்னும் 8 மாசமே இருக்கிறது.. தமிழகத்தில் அமைய போவது திமுக ஆட்சிதான் என்பதில் மக்கள் தெளிவா இருக்காங்க.

அடுத்த முதல்வர்
முதல்வர் நாற்காலியில் உட்கார போவது தலைவர் ஸ்டாலின் தான்.. ஆனால், அவர் முதல்வர் ஆகக்கூடாது என்று சிலர் தினமும் சோஷியல் மீடியாவில் நமக்கு எதிரான தவறான கருத்துகளை பரப்புகிறார்கள்.. திராவிட இயக்க தலைவர்களாக அண்ணா, கலைஞர் போன்றோரின் சாதனைகளை நாம் சொல்ல தவறிவிட்டோமோ என்ற குறை எனக்கு இருக்கிறது.. அந்த குறையை நிவர்த்தி செய்ய நமது கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றார்.

அவசர தீர்மானம்
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி பேசினார்.. அப்போது, இந்த நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது... கடந்த வருஷம் ஏகப்பட்ட குளறுபடிகள் அதில் நடந்தது.. இப்போதும், கொரோனா காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.. இதற்கு சட்டமன்றத்தை கூட்டி அவசர தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்.. நீட் விவகாரத்தில் ஸ்டாலின் அறிவித்தால் போராட்டம் நடத்த நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கிறோம்.

சவால்கள்
திமுகவின் தலைவராக மூன்றாம் ஆண்டு பயணத்தில் ஸ்டாலின் உள்ளார்.. இது அவருக்கு சவால்தான்... வரும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த சவாலை எதிர்கொள்ள அவர் தயாராகவே இருக்கிறார்.. வரும் சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு அளிப்பதை தலைமைதான் முடிவு செய்யும்!

இந்தி திணிப்பு
எப்போதுமே மதத்தை வைத்து திமுக அரசியல் செய்யவில்லை.. அதனை யார் செய்கிறார்கள் என்று எல்லோருக்குமேநல்லா தெரியும்.. திமுகவின் எதிர்ப்பு இந்திக்கு இல்லை.. இந்தி ஆதிக்கத்திற்கும், இந்தி திணிப்பிற்கும் தான் எதிர்ப்பு என்று தெளிவுபடுத்தினார் உதயநிதி.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications