நாளைக்கு நீட் தேர்வு எழுத போறீங்களா? மறந்தும் ’இந்த’ விஷயங்களை செய்யாதீங்க மாணவர்களே! ரெம்ப கவனம்!
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்காக தேசிய தேர்வு முகமை நாடு முழுவதும் 3ஆம் தேதி (நாளை) நீட் தேர்வை நடத்துகிறது. நாடு முழுவதும் 23 லட்சத்திற்கும் அதிகமானோரும், தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத இருக்கின்றனர். இந்த நிலையில் நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அது என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திற்கு முன் இந்த தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்பதால் மாணவர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2026 - 2027 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடக்கிறது நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் 23 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுத உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, ஈரோடு நாமக்கல் உள்ளிட்ட 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை. சென்னையில் மட்டும் 41 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம் நீட் தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதனை 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என nta கூறியுள்ளது.
மதியம் 2.30 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்தியாவில் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். இதில் சுமார் 15ஆயிரம் பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட மொத்தம் 13 மொழிகளில் நடைபெறுகிறது.
நீட் தேர்வு தொடர்பாக முறைகேடுகளை தடுக்க மாணவ மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவிகள் அந்த விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஹால் டிக்கெட், எழுதுகோல் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மதம், கலாச்சாரம் சார்ந்த ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகள் மோதிரம், வளையல், கம்மல், மூக்குத்தி, செயின், கண்ணாடி, தாயத்து, பெல்ட் அணியக் கூடாது.
உயரம் குறைந்த ஹில்ஸ் இல்லாத செருப்புகள் மட்டுமே அணிய வேண்டும். அதிக உயரம் கொண்ட ஷூக்கள், காலணிகள் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. நண்பகல் ஒரு மணி முதலே கடும் சோதனைகளுக்கு பிறகு மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications