நீட் தேர்வில் 800க்கு வெறும் 28 மார்க்.. ஆனாலும் சீட் கன்பார்ம்! முன்னேறிய ஜாதி ஏழைகளின் புது மோசடி!
சென்னை: நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சீட் எளிதில் கிடைக்கும். ஆனால், மருத்துவக் கல்லூரியில் சீட்டுக்காக முன்னேறிய சாதி ஏழைகள் புதுவித மோசடியில் ஈடுபட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த மோசடி மூலம் குறைந்த மதிப்பெண் எடுத்து மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்கின்றனர்.
நீட் பிஜி 2025-26 மருத்துவக் கலந்தாய்வில் என்.ஆர்.ஐ (NRI) ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மோசடி நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் சுற்று
மருத்துவக் கலந்தாய்வு என்பது ஒரே நேரத்தில் அனைத்து இடங்களையும் நிரப்பும் முறை அல்ல. இது பல நிலைகளாக நடைபெறும். முதலில் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். இரண்டாம் சுற்று என்பது, முதல் சுற்றில் இடம் கிடைத்தும் சேராதவர்கள் அல்லது இடத்தைத் தரம் உயர்த்த விரும்புபவர்களுக்காக மீதமுள்ள இடங்களுக்கு இந்தச் சுற்று நடைபெறும்.
மூன்றாவது சுற்று
முதல் இரண்டு சுற்றுகளுக்குப் பிறகும் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, மூன்றாம் சுற்று நடத்தப்படுகிறது. இதில் தான் தற்போது 811 மாணவர்கள் என்.ஆர்.ஐ பிரிவுக்கு மாறியுள்ளனர். இந்திய மாணவர்கள் தங்களை என்.ஆர்.ஐ பிரிவுக்கு மாற்றுவதற்குப் முக்கிய காரணங்கள் உள்ளன. இந்தியப் பொதுப் பிரிவில் கடும் போட்டி இருக்கும். ஆனால், என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டில் போட்டி மிகக் குறைவு. இதனால் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தால் கூட, இப்பிரிவின் கீழ் முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற முடியும்.
என்ஆர்ஐ முறை
800 மதிப்பெண்ணுக்கு வெறும் 28 மதிப்பெண் எடுத்து, முதுகலை மருத்துவ படிப்பில் முன்னேறிய சாதி ஏழைகள் சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்.ஆர்.ஐ-களின் வார்டுகள் என்ற விதியின் கீழ், வெளிநாட்டில் வசிக்கும் தூரத்து உறவினர்கள் சித்தப்பா, அத்தை, தாத்தா, பாட்டி இவர்களில் ஒருவர் மாணவரைத் தத்தெடுத்துப் படிப்புச் செலவை ஏற்பதாக உறுதி அளித்தால், அந்த மாணவர் என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டிற்குத் தகுதி பெறுகிறார்.
என்ஆர்ஐ கட்டணம்
என்.ஆர்.ஐ இடங்களுக்கான கட்டணம் மிக அதிகம். ஆண்டுக்கு சுமார் ₹45 லட்சம் முதல் ₹95 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். தகுதி இருந்தும் பணம் இல்லாத திறமையான மாணவர்களுக்குப் பதில், குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் பல கோடி ரூபாய் கட்டணம் செலுத்தத் தயாராக இருக்கும் மாணவர்கள் இந்த வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
கண்டுபிடித்த அமலாக்கத்துறை
பொதுப் பிரிவில் ரேங்க் குறைவாக இருப்பதால் வராத 'ரேடியாலஜி', 'டெர்மட்டாலஜி' போன்ற அதிகத் தேவை உள்ள மருத்துவப் பாடப்பிரிவுகளை, என்.ஆர்.ஐ ஒதுக்கீடு மூலம் எளிதாகப் பெற முடிகிறது. இப்படித்தான் முன்னேறிய சாதி ஏழைகள் பிரிவில்
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் போலி என்.ஆர்.ஐ (NRI) சான்றிதழ்கள் மூலம் சுமார் 18,000 மருத்துவ இடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டிருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.
முன்னேறிய சாதி ஏழைகளிடம் இவ்வளவு பணம் எப்படி?
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், என்.ஆர்.ஐ பிரிவில் சீட் கேட்பவர்களில் பெரும்பாலானோர் EWS பிரிவில், அதாவது முன்னேறிய சாதி ஏழை பிரிவில் வருகின்றனர். முன்னேறிய சாதி ஏழை எனில், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியாதவர்கள்தான் இந்த பிரவில் வருவார்கள். ஆனால் அப்படி இருப்பவர்களால், என்.ஆர்.ஐ பிரிவில் ₹45 லட்சம் முதல் ₹95 லட்சம் வரை கட்டணம் செலுத்தி எப்படி படிக்க முடியும் என்பதுதான் கேள்வி.
அப்படியெனில், முன்னேறிய சாதி ஏழை என போலியாக தங்களை காட்டிக்கொண்டு, இட ஒதுக்கீடு சலுகைகளை சிலர் அனுபவிக்கின்றனர் என்பதுதான் உண்மை.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications