நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்.. நெல்லை குற்றவியல் நீதிமன்றம் அதிரடி!
தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நெல்லை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நெல்லை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று இரவு கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு மருத்துவமனையில் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது..
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். இதில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து நெல்லை கண்ணன் முறையற்ற விஷயங்களை பேசினார். இவர்களின் கதையை தீர்க்க வேண்டும் என்பது போல அவர் மோசமாக பேசி இருந்தார்.
இதற்கு பாஜக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக இணையத்திலும், களத்திலும் பாஜகவினர் போராட்டம் செய்து வந்தனர். இதையடுத்து நேற்று இரவு நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

என்ன கோர்ட்
நெல்லை கண்ணன் இன்று நெல்லை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.இவரை போலீசார் பெரும்பாலும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிக்கை வைத்தனர். 10 நாட்கள் வரை இவரை கஸ்டடியில் வைக்க கோரிக்கை வைத்தனர். இவருக்கு எதிராக மொத்தம் மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மருத்துவ சோதனை
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இவர் கடந்த இரண்டு நாட்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். வயது முதிர்வு காரணமாக இவருக்கு வயிற்றிலும், மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது.

பெயில் கேட்க வாய்ப்பு
இதனால் கோர்ட்டில் ஆஜர் செய்யும் முன் நெல்லை கண்ணனுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த ரிப்போர்ட்டை கோர்ட்டில் வழங்கினார்கள். உடல் நலத்தை காரணம் காட்டி நெல்லை கண்ணன் இன்று பெயில் கேட்டார். அதேபோல் போலீஸ் தரப்பு விசாரணை காவலில் எடுக்கவும் கோரிக்கை வைத்தது . ஆனால் பெயில் வழங்க மறுத்த நெல்லை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, ஜனவரி 13ம் தேதி வரை நெல்லை கண்ணனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர்.

சட்டம்
பிரதமர் குறித்தும், கொலை குறித்தும் பேசியதால் இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. அப்படி நடந்தால் இவருக்கு எதிர்காலத்தில் பெயில் கிடைப்பது சிக்கல் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் மீது அப்படி எதுவும் போலீஸ் இதுவரை வழக்கு பதியவில்லை.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications