பாஜகவின் சூழ்ச்சி.. என்ஐஏவும் ஈடியும் ஏவல் அமைப்புகள்! எஸ்டிபிஐ ஆர்பாட்டத்தில் நெல்லை முபாரக் ஆவேசம்
சென்னை: அண்மையில் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் வீடுகளில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனையை கண்டித்து சென்னையில் எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது பாரூக் உள்ளிட்டவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நடவடிக்கையை கண்டித்தும், மத்திய பாஜக அரசின் விசாரணை நிறுவனங்களை கண்டித்தும், சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இந்த விழாவில் பேசிய எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், "என்ஐஏ.வின் சோதனை நடவடிக்கை என்பது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் மற்றும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஒன்றிய அரசின் ஏவல் நடவடிக்கையாகும். கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் நல அரசியலை முன்னெடுத்துவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மக்கள் நலனுக்காக களத்தில் முன்னணியில் நின்று போராடிக் கொண்டிருக்கிறது.
மக்கள் பிரச்சினைகளை ஆளும் அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதில் முன்னணியில் இருக்கின்றது. ஆளும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி சமரசமின்றி தொடர்ந்து போராடி வருகிறது. பாஜக அரசுக்கு சிம்ம சொப்பனமாக அதன் ஒவ்வொரு மக்கள்விரோத நடவடிக்கைகளையும் தோலுரிக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையை அதன் கைப்பாவை ஏவல் அமைப்புகள் மூலமாக ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டுவருகின்றது.

பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்ற கொள்கை முழக்கத்தோடு ஜனநாயக முறையில் செயல்பட்டுவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் நிலைப்பாடு மிகத் தெளிவானது. மக்கள் நலனுக்கான அரசியலில் வீரியமாக ஈடுபடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை மக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் எண்ணமே இந்த சோதனையாகும்.
அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எஸ்.டி.பி.ஐ. கட்சி அதன் வலுவான ஜனநாயக நடவடிக்கைகளின் மூலமாக பாஜக அரசின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்கும். ஒருபோதும் நெருக்கடிகளின் மூலமாக அதன் அரசியல் செயல்பாடுகளை ஒடுக்கிவிட முடியாது. சோதனைகள் மூலம் இன்னும் வீரியமாகவே களமாடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.டி.பி.ஐ. கட்சி மட்டுமின்றி பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைபாடு கொண்ட கட்சிகள், சிறுபான்மை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை தனது கைப்பாவை அமைப்புகளான என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டு அச்சுறுத்தி வருகின்றது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு எதிர்த்து நின்று குரல் கொடுக்க வேண்டும். தேசத்தின் ஜனநாயகத்தை காக்க வேண்டும்." என தெரிவித்தார்.

எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் ரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வழ.பசும்பொன்பாண்டியன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஹைதர் அலி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேரா த.ஜெயராமன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பேச்சாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications