இதை எப்படி மிஸ் பண்ணாரு.. எம்ஜிஆர் பாடியதாக தப்பாக அறிக்கை விட்ட எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா.. தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா என்ற பாடலில் வரும் சில வரியை மேற்கோள் காட்டி, அதிமுகவின் தோல்வி குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். அந்த பாடலை புரட்சி தலைவர் பாடல் என எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதில் தேனி, திண்டுக்கல் , தென் சென்னை உள்பட ஏழு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்தது. இந்த தோல்வியை அடுத்து தொண்டர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது'' - திருக்குறள். நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே. வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அதிமுக என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரசார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன.
தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல. அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
அதிமுகவை சூழ்ச்சியால் வீழ்த்தி, சுயநலத்திற்காக கபளீகரம் செய்ய திரை மறைவிலும், வெளிப்படையாகவும் நடைபெற்ற சூழ்ச்சியையும், சூதுகளையும் மிகவும் நுணுக்கமாகப் புரிந்துகொண்ட தொண்டர்களின் அன்புக் கட்டளைகளுக்கு ஏற்பவே, கொள்கைக்காக வாழ்வோம், எது வந்தாலும் ஏற்போம்'' என்று இந்தத் தேர்தலில் அதிமுக களம் இறங்கியது.
இந்தத் தேர்தலை கனநேர சிறிய வெற்றிக்காக அல்லாமல், ஏற்றுக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக துணிவுடன் எதிர்கொண்டது அதிமுக, தனித்து நின்றோம். கொள்கை வீரர்களாக தலை நிமிர்ந்து நிற்கிறோம்.
அதிமுக அதிகார பலம் படைத்தவர்களின் நிழலில், மக்கள் நலனையும், மாநிலத்தின் பெருமையையும் இழக்காமல், பதவி என்பது எங்களைப் பொறுத்தவரை மக்களுக்குப் பணியாற்ற ஒரு பாதையே தவிர, எல்லா நேரத்திலும் கொள்கைச் சிங்கங்களாகவே அரசியல் களமாடுவோம் என்பதை இந்தத் தேர்தல் உலகுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறது.
இனி அதிமுக அவ்வளவு தான் என்று 1980, 2004 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் போதும்; 1996 சட்டமன்றத் தேர்தல் முடிவின்போதும்; ஏன், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும், நம் கதை முடிந்ததாக ஆரூடம் கூறி ஆனந்தப்பட்டவர்களின் அகங்காரத்தை முறியடித்த பெருமை தொண்டர்களுக்கு உண்டு.
2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களைப் பெற்று நாம் யார் என்பதை உலகுக்குக் காட்டினோம். இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், இதுநாள்வரை அதிமுக மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளை மனதில் கொண்டு நம் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தலின்போது அல்லும், பகலும் அயராது உழைத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன்.
'உங்கள் உழைப்புக்கும், தியாகத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன்.' என்று கண் கலங்குகிறேன். இன்னும் தீவிரமாகவும், தீர்க்கமாகவும் பணியாற்றி, நீங்கள் தலைநிமிர்ந்து வெற்றி நடை போட உறுதி ஏற்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை பாசத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவுக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், கூட்டணி இயக்கத்தினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். 'எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா, சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' என்ற புரட்சி தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும்" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
இதனிடையே அறிக்கையில் வரும் 'எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா, சத்தியமே லட்சியமாய் கொள்ளடா' என்ற பாடலை புரட்சி தலைவர் பாடல் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால் அது எம்ஜிஆர் படத்தில் வரும் பாடல் இல்லை.. சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா.. தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா பாடலில் வரும் வரிகள் அவை. இந்த பாடல் நீலமலை திருடன் படத்தில் வரும் பாடல் ஆகும். திருமுகம் இயக்கத்தில் ரஞ்சன் என்பவர் பாடியபடி செல்லும் பாடலாக இருக்கும். இந்த படத்தில் தங்கவேலு, டிஎஸ் பாலையா, பிஎஸ் வீரப்பா உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் வரும் பாடலை மேற்கோள் காட்டித்தான் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியிருப்பார். ஆனால் அதை புரட்சி தலைவர் பாடல் என்று கூறியது தவறு என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து கூறியுள்ளனர்.
-
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications