ரேஷனில் இனி "எக்ஸ்ட்ரா".. தமிழக அரசின் ஆச்சர்யமூட்டும் முடிவு.. ரேஷன் அட்டை தாரர்களுக்கு சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கூடுதல் கோதுமை விரைவில் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு கூடுதல் கோதுமை ஒதுக்கிய நிலையில்.. விரைவில் கோதுமையின் அளவு உயர்த்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் கோதுமை ஒதுக்கீடு சில வருடங்களுக்கு முன்பு வரை 13 ஆயிரம் டன் என்ற அளவில் இருந்தது. பின்னர் அந்த அளவு படிப்படியாக குறைந்து 3 ஆயிரம் டன் ஆக மாறியது. இதனால் கோதுமை தட்டுப்பாடு ரேஷன் கடைகளில் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசின் தொடர் கோரிக்கையை ஏற்று.. ரேஷன் கடைகளுக்கு மத்திய அரசு இப்போது கூடுதல் கோதுமை ஒதுக்கி உள்ளது. அதன்படி 17100 டன் கோதுமை ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

ration

இது போக தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ் ஒன்று வந்துள்ளது. தமிழ்நாடு முழுக்க இதுவரை புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் பல லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இப்படி தமிழ்நாட்டில் புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிதாக குடியேறியவர்கள், தனி வீடு பிரிந்தவர்கள் பலர் ரேஷன் கார்டுகளை வாங்க தொடங்கி உள்ளனர். இப்படி ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்தவர்கள் ஒருவர் இருவர் இல்லை. மொத்தமாக 2.80 லட்சம் பேர்.

இவர்கள் விண்ணப்பங்களை மேற்கொண்டு 1 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்படாமல் போனதற்கு காரணம் லோக்சபா தேர்தல். லோக்சபா தேர்தல் விதிகள் காரணமாக ரேஷன் கார்டுகளை கொடுக்க முடியவில்லை. அதன் சரிபார்ப்பு பணிகளை செய்ய முடியவில்லை.

இப்போது அதெல்லாம் முடிந்து ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுகின்றன. ஆனாலும் இன்னும் பலருக்கு ரேஷன் கார்டுகளை வழங்கவில்லை.. புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்யவில்லை என்று புகார்கள் உள்ளன.

நல்ல செய்தி: இப்படிப்பட்ட நிலையில்தான்.. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இந்த 80 ஆயிரம் பேருக்கு இன்னும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை.

அவர்களுக்கு இந்த வாரம் முதல் பொருட்கள் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் யாருக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்று லிஸ்ட் இருக்கும். அந்த லிஸ்டில் இதுவரை இவர்கள் பெயர் இல்லை. காரணம் இவர்கள் பெயர் கொண்ட லிஸ்ட் இன்னும் கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் முதல் இவர்கள் பெயர் கொண்ட லிஸ்ட் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும். அடுத்த மாதம் பெயர் வந்துவிடும். புதிய லிஸ்ட் தயாராகிறது அப்போது கொடுப்போம் என்று அரசு தரப்பு கூறி உள்ளது.

புதிய ரேஷன் கார்டு: ரேஷன் கடைகளில் தற்போது வரை விண்ணப்பித்த 2.80 லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.

மீதம் உள்ள 2 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புதிய ரேஷன் கார்டுகளை வழங்க இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. நவம்பர் முதல் வாரத்திற்குள் பெரும்பாலும் விடுபட்ட நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விடும் என்று தகவல்கள் வருகின்றன.

ஆனால் அவர்களும் உடனே ரேஷனில் பொருட்களை வாங்க முடியாது. அவர்களுக்கான புதிய லிஸ்ட் தயாரான பின்பே ரேஷனில் பொருட்கள் வாங்க முடியும் என்று ரேஷன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த லிஸ்ட் விரைவில் தயாராகிவிடும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+