அமைச்சர் மஸ்தான் ‘சூப்பர்’ அறிவிப்பு! 6 - 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை!
சென்னை : பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று மாலை சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாவதம் நடைபெற்றது. அப்போது சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 அறிவிப்புகளை வெளியிட்டார் துறை அமைச்சர் மஸ்தான்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், சென்னை மற்றும் கோவையில் ரூ.81.68 லட்சம் செலவில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர்கள் விடுதி துவங்கப்படும் என அறிவித்தார். சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தைக் கொண்டாட வழங்கும் தொகையை ரூ.2000ல் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
உலமாக்கள், பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications