வங்க கடலில் புதிய புயல்.. செம ஸ்பீடில் சூறாவளி காற்று வீசக்கூடும்.. வார்னிங் தந்த வானிலை மையம்
வங்ககடலில் புயல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வருகிற 22-ம் தேதி வங்கதேசம் அருகே கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம், வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 18, 19-ம் தேதிகளில், அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்திருந்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் நேற்றைய தினம், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.

ஆய்வு மையம்
இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற போவதாகவும், அது வரும் 23ம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மரை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்திருக்கிறது.. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது: "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகும்.

வலுப்பெறும்
சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலவுகிறது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 19ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மற்றும் அதன் பின் வடக்கு வடமேற்கு திசையில் அந்தமான் கடல் ஓரம் வழியே நகர்ந்து 20ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பின்னர் புயலாக வலுப்பெற்று 23ம் தேதி வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவும்.

புயல்காற்று வீசும்
இதன் காரணமாக தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இன்றும் தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதி மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளையும் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதி கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 19ம் தேதியும், தெற்கு அந்தமான் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் பகுதிகளில் வரும் 20ம் தேதியும் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications