ரயில் சேவையே மொத்தமாக மாற போகுதே.. ஓ வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்.. இப்படித்தான் இருக்குமா.. அடடா
சென்னை: இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்ற விவரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பான புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஆறு மாதங்களில் செயல்பாட்டிற்கு வர உள்ளது, முழு கட்டமைப்பு மற்றும் கூரை உட்பட புதிய வடிவமைப்பு கட்டப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா ஆகிய ரூட்டில் முதல் கட்டமாக இந்த ஸ்லீப்பர் ரயில்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த மாதமே இதற்கான சோதனை ஓட்டங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி இந்த சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கட்டுமானம் தீவிரமாக நடந்து வருகிறது. வந்தே பாரத் ரயில் ஹிட் அடித்த நிலையில் அதில் ஸ்லீப்பர் கொண்டு வர உள்ளனர். அதிக கட்டணத்தில் மக்கள் சொகுசாக செல்லும் வகையில் இந்த ஸ்லீப்பர் ரயில்களை கொண்டு வர உள்ளனர்.

வந்தே பாரத் ரயிலில் சாதாரண ரயில் வேறு வந்துள்ளது.. அந்த சாதாரண ரயிலுக்கு இடையில்தான் தற்போது அதிரடியாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னை திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. அப்போதே அது ஸ்லீப்பர் ரயிலாக தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதன் கட்டுமானம் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் இத்தனை நாட்களுக்கு பின் மீண்டும் ஸ்லீப்பர் செல் கட்டுமானம் விறுவிறுப்படைந்து உள்ளது. இந்த கட்டுமானம் முடிந்ததும் திருநெல்வேலி ரயிலில் ஸ்லீப்பர் கோச்சுகள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வந்தே பாரத் படுக்கை ரயில்: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது. தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

2024ல் இந்த ரயில் அமலுக்கு வர உள்ளது. இந்த ரயிலின் உட்புற புகைப்படம் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க வெள்ளையாக நவீன படுக்கையுடன், மிகப்பெரிய ஜன்னலுடன் ஏசி வசதியுடன் இந்த ரயில் உட்புறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று படுக்கை வரிசை கொண்ட பெட்டி, 2 பெட்டி கொண்ட படுக்கை வரிசை என்று இரண்டு விதமான படுக்கை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உள்ளே டிஜிட்டல் போர்ட் வைக்கப்பட்டு உள்ளது.
வந்தே பாரத் ரயிலில் வர உள்ள ஸ்லீப்பர் சேவையின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. பார்க்க விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் கோச் போல இருக்கும் இந்த ரயிலின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
முக்கியமான 5 சேவைகள்: வந்தே பாரத் ரயிலில் வர உள்ள ஸ்லீப்பர் சேவையில் முக்கியமான் 5 வசதிகள் இடம்பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1) மேல் பெர்த்தில் ஏறுவதற்கு வித்தியாசமான படிகள். கம்பிகள் இல்லாமல் அழகான படிகள்..
2) தானியங்கி கதவுகள், சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் கேபின் விளக்குகள் வைக்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் கேபின் விளக்குகள் கொண்டு வரப்பட உள்ளன.
3) தற்போதைய ராஜதானி ரயில்களை விட குறைவான ஜெர்க் மற்றும் சத்தம் கொண்டவை. உள்ளே இருக்கும் போது பயணிப்பதே தெரியாத அளவிற்கு நவீனமாக பயணம் இருக்கும்.
4) Vacuum கழிப்பறைகள், டிஜிட்டல் கதவுகள் இருக்கும் . இதனால் கழிப்பறை சுத்தமாக நாற்றம் இன்றி இருக்கும்.
5) உள்ளே சீட்டுகளை திறக்கும் பெர்த் வசதி புதுமையாக இருக்கும். பழைய முறை போல கொக்கி போட வேண்டியது இல்லை. இதனால் அதிக இடவசதி இருக்கும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications