இதெல்லாம் லிஸ்டுலேயே இல்லையே.. ஐடி ஊழியர்களை துரத்தும் புதிய பூதம்.. கட்டம் கட்டும் "சைலன்ட் லே-ஆப்"
சென்னை: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் "சைலன்ட் லே-ஆப்" அதிக அளவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது யாரையும் மொத்தமாக பணி நீக்கமால்.. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவராக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை ஆகும் இது. இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 50,000 பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
2023 மற்றும் 2024 க்கு இடையில் சுமார் 25,000 வேலை இழப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டில் இரட்டிப்பாகும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. துல்லியமான பணிநீக்க புள்ளிவிவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை.

ஐடி சந்தை நிலவரங்கள்
ஐடி சந்தை நிலவரங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொழில்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நிறுவனங்களின் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவது போன்றவை மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் கூடுதல் பணியாளர்களைக் குறைக்கத் தூண்டுகின்றன.
டிசிஎஸ் நிறுவனம் மார்ச் 2026-க்குள் தனது ஊழியர்களில் 2% (சுமார் 12,000 பேர்) குறைக்கப்படும் என்று கடந்த ஜூலையில் அறிவித்தது. இருப்பினும், பல பெரிய மற்றும் நடுத்தர தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் ஊழியர்களை ராஜினாமா செய்ய அல்லது வேறு வேலைகளைத் தேடுமாறு ரகசியமாகக் கேட்டுக்கொள்கின்றன.
சைலன்ட் லே ஆப்
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் "சைலன்ட் லே-ஆப்" அதிக அளவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது யாரையும் மொத்தமாக பணி நீக்கமால்.. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவராக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை ஆகும் இது.
சில நிறுவனங்கள் இந்த பணிநீக்கங்களை மிகவும் நுட்பமான முறையில் செயல்படுத்தி வருகின்றன. "சில மாதங்களுக்கு முன்பு, எனது மேலாளர், நான் பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் இருப்பதாகத் தெரிவித்தார். எனக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் நானே வெளியேறிவிட்டேன். இது ஒருவகையிலான் சைலண்ட் லே ஆப் ஆகும். இந்த ஆண்டு, பெரிய நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான பதவிகள் அமைதியாக நீக்கப்பட்டுள்ளன," என்று சமீபத்தில் நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் பேட்டிகளில் குறிப்பிட்டார்.
தொடரும் பணி நீக்கம்
கடந்த ஜூலை முதல், ஆக்சென்ச்சர் மற்றும் டிசிஎஸ் இணைந்து உலகளவில் 23,000 க்கும் மேற்பட்ட பணிநீக்கங்களை அறிவித்துள்ளன. ஆக்சென்ச்சர் நிறுவனம் $865 மில்லியன் மதிப்புள்ள வணிக மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது, இதில் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் உலகளவில் 11,000 பதவிகள் குறைக்கப்பட்டன.
செப்டம்பர் காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டபடி, டிசிஎஸ் சுமார் 6,000 ஊழியர்கள் அல்லது அதன் பணியாளர்களில் 1% பேர் வெளியேறியதாக அறிவித்தது. இதன் மூலம் மொத்தமாக 19,755 பணியாளர்கள் குறைக்கப்பட்டனர். செப்டம்பர் மாத இறுதியில் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 593,314 ஆக இருந்தது.
டிசிஎஸ் மற்றும் ஆக்சென்ச்சரின் நடவடிக்கைகள் மற்ற நிறுவனங்களையும் இதேபோன்ற நடைமுறைகளை பின்பற்ற தூண்டலாம் என்று தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். முக்கியமாக இந்தியாவில் ஐடி நிறுவனங்களில் Lay-Off தீவிரமாக நடந்து வருகிறது. அதிக அனுபவம் உள்ள ஊழியர்கள், அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பலர் பணியில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் UNITE அமைப்பின் இணை செயலாளர் சந்திரசேகர் ஆசாத் ஒன்இந்தியாவிடம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர் கீழ்கண்ட நேர்காணலில் விளக்கி உள்ளார்.
டிசிஎஸ், ஆக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் திறன் மேம்பாடு மற்றும் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் தங்கள் நிறுவனங்களில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளன. ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளைண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன.












Click it and Unblock the Notifications