ஐடி துறைக்கு தான் ஆப்பு.. அடி மேல் அடி வாங்கும் கம்பெனிகள்! கோடிக்கணக்கில் செலவழித்த TCS, INFOSYS!
சென்னை: புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் ஹெசிஎல் டெக் ஆகியவற்றுக்கு ஒரே காலாண்டில் பெரும் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. 2025 நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்த இந்த புதிய தொழிலாளர் சட்டங்களின் காரணமாக, இந்த மூன்று நிறுவனங்களும் 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான செலவுகளைச் சந்தித்துள்ளன.
டிசம்பர் 31-ல் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு ஏற்ப தங்களைச் சரிசெய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் ஹெசிஎல்டெக் நிறுவனங்களின் லாபம் இரட்டை இலக்க சதவீதத்தில் சரிந்துள்ளது.
குறிப்பாக, இன்ஃபோசிஸ் தனது காலாண்டு முடிவுகளை அறிவித்தபோது, புதிய தொழிலாளர் சட்டங்களால் ரூ.1,289 கோடி அளவிலான விசேஷச் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. இந்தச் செலவு பெரும்பாலும், கடந்த கால சேவை ஆண்டுகளுக்கான கிராசுட்டி தொகை அதிகரிப்பு மற்றும் விடுப்பு சம்பந்தமான பொறுப்புகள் உயர்ந்ததன் காரணமாக ஏற்பட்டதாக நிறுவனம் விளக்கம் அளித்தது.

தொழிலாளர் சட்டங்கள்
அதேபோல், டிசிஎஸ் நிறுவனம் ரூ.2,128 கோடி அளவிலான விசேஷச் செலவைச் சந்தித்துள்ளது. இதில் பெரும்பாலான தொகை ஊழியர்களுக்கான கிராசுட்டி சரிசெய்தலுக்காக செலவிடப்பட்டுள்ளது. ஹெசிஎல்டெக் நிறுவனம் இந்த மாற்றங்களுக்காக ரூ.956 கோடி அளவிலான ஒருமுறை செலவை பதிவு செய்துள்ளது. இந்தச் செலவுகள் நிறுவனங்களின் செயல்பாட்டு லாப விகிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டிசிஎஸ் நிறுவனம் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, மூன்றாவது காலாண்டில் தனது செயல்பாட்டு லாப விகிதத்தை 25.2 சதவீதமாக நிலைநிறுத்தியுள்ளது.
ஹெசிஎல் டெக்
ஹெசிஎல் டெக் நிறுவனமும் 18.6 சதவீதமாக லாப விகிதத்தை மேம்படுத்தியுள்ளது. ஆனால் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு இந்த மாற்றங்கள் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்தின. அந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாப விகிதம், முந்தைய காலாண்டின் 21 சதவீதத்திலிருந்து 18.4 சதவீதமாக குறைந்தது. இருப்பினும், புதிய தொழிலாளர் சட்டங்கள் காரணமாக ஏற்பட்ட கூடுதல் செலவுகள் இல்லையெனில், லாப விகிதம் 21 சதவீதத்தைத் தாண்டியிருக்கும் என்றும் இன்ஃபோசிஸ் விளக்கம் அளித்துள்ளது.
ஐடி துறை
புதிய தொழிலாளர் சட்டங்கள் ஊழியர்களின் சம்பளம், சமூக பாதுகாப்பு, பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் நலத்திட்டங்களை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டவை. குறிப்பாக, ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவைத் துறைகளில் நிரந்தர மற்றும் நிரந்தரமல்லாத பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்பட வேண்டும், கட்டாயமாக பணியமர்த்தல் கடிதம் வழங்க வேண்டும், அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், வேலை நேரம் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பன இதில் இடம் பெற்றுள்ளன.
டிசிஎஸ்
மேலும், பெண்கள் இரவு நேர பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளையும் இந்த சட்டங்கள் விரிவுபடுத்தியுள்ளன. இந்த மாற்றங்கள் ஒருமுறை மட்டுமே பெரிய செலவாக இருக்கும் என்றும், எதிர்காலத்தில் ஆண்டுக்கு 10 முதல் 20 பேசிஸ் பாயிண்ட் அளவில்தான் லாப விகிதத்தில் தாக்கம் இருக்கும் என்றும் மூன்று நிறுவனங்களின் நிர்வாகிகளும் கூறியுள்ளனர். டிசிஎஸ் நிறுவனத்தின் நிதித் தலைவர் சமீர் செக்சேரியா, இது கடந்த கால சேவை செலவாக இருப்பதால், தொடர்ந்து பெரிய தாக்கம் இருக்காது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் மற்றும் ஹெசிஎல்டெக் நிர்வாகிகளும் இதே போன்ற கருத்தையே தெரிவித்துள்ளனர். ஆனால், சில ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள் இந்தக் கருத்தை முழுமையாக ஏற்கவில்லை. ஜெஃப்ரிஸ் போன்ற நிறுவனங்கள், புதிய தொழிலாளர் சட்டங்கள் எதிர்காலத்தில் ஐடி நிறுவனங்களின் லாப விகிதத்திற்கு தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளன. ஊழியர்களின் சம்பளம் குறைந்தபட்சம் மொத்த செலவின் 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதும், அதன்மேல் பிஎப் மற்றும் கிராசுட்டி கணக்கிடப்பட வேண்டும் என்பதும், நிறுவனங்களின் ஊழியர் செலவுகளை நிரந்தரமாக உயர்த்தும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஐடி நிறுவனங்கள்
இதன் விளைவாக, வருங்காலங்களில் சம்பள உயர்வுகள் குறைக்கப்படலாம் என்றும், குறிப்பாக மூத்த நிலை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்படுத்தப்படலாம் என்றும் சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். மெதுவான வருவாய் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு காரணமாக மாறும் வணிக அமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவிசா விதிமுறைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகியவையும் சேர்ந்து, ஐடி நிறுவனங்களுக்கு கூடுதல் சவால்களை உருவாக்கும் என்று பார்க்கப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications