சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை
சென்னை: இன்று காலை முதலே பல்வேறு சிலிண்டர் ஏஜென்சிகளில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) சிலிண்டர் விநியோகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
சென்னையில் இன்று பல்வேறு கேஸ் ஏஜென்சிகள் சிலிண்டர் புக்கிங் இருக்கு பல்வேறு கட்டுப்பாடு விதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீர் காசியாவில் போர் பதற்றம் காரணமாக சிலிண்டர் வாங்குவதற்கு 25 நாட்கள் என்று கட்டுப்பாடுகளை மாற்றி அமைத்து உள்ளன.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் விடுத்துள்ள புதிய அறிவிப்பின்படி:
- ஒரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தது 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- சில குறிப்பிட்ட மாநிலங்களில் இந்த கால அளவு 25 நாட்களாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் தேவையின்றி சிலிண்டர்களைக் குவித்து வைப்பதைத் (பீதி காரணமாக முன்பதிவு செய்தல்) தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னணி மற்றும் காரணங்கள்
ஈரான் - இஸ்ரேல் அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்தால் எரிவாயு தட்டுப்பாடும், விலை உயர்வும் ஏற்படலாம் எனப் பரவிய தகவலால், கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு சிலிண்டர்களை முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் விநியோகச் சங்கிலியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 7 முதல் சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த முறையற்ற முன்பதிவைத் தடுத்து, தகுதியுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவே இந்த 25 நாட்கள் விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்
"நாட்டில் தற்போது போதிய அளவு எரிவாயு இருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தில் சிலிண்டர்களைச் சேமித்து வைக்க வேண்டாம். இந்த 25 நாட்கள் கட்டுப்பாடு என்பது தற்காலிகமானது மட்டுமே," என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அறிய வேண்டிய விஷயம்
உங்கள் சிலிண்டர் முன்பதிவு நிலை மற்றும் விநியோக விபரங்களை அறிய உங்கள் எரிவாயு முகமையின் அதிகாரப்பூர்வ செயலியைச் சரி பாருங்கள். ஒரே நேரத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தியை மனதில் வைத்து பல்வேறு மக்கள் அதிகப்படியான புக்கிங் செய்வதை தடுக்கவே அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. ஏனெனில் ஒரே நேரத்தில் பலரும் போட்டி போட்டு புக்கிங் செய்தால் சிலிண்டர் விநியோகத்தை முறைப்படுத்தி கொடுக்க முடியாது.
பெட்ரோல் வதந்தி
அண்மையில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று வதந்தி பரவிதால் பலரும் போட்டி போட்டு பெட்ரோல் டீசல் வாங்க வந்ததும் அரசின் கவனத்திற்கு சென்றது. அதை ஓரளவு சமாளித்த அரசு, கேஸ் தட்டுப்பாடு விஷயத்தில் கட்டுப்பாடுகளை விதித்து தற்போது இந்த முடிவினை எடுத்துள்ளது. பொதுவாக மக்கள் வீதியில் செய்யும் செயல்களே விலை உயர்வுக்கு காரணமாக அமைகின்றன. அப்படியான நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
எரிகிற தீயில் எண்ணெய்.. வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு.. வியாபாரிகள் அதிர்ச்சி -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications