குடும்ப அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. இனி "இவங்களுக்கும்" ரேஷன் கார்டு இருக்கு.. தமிழக அரசு அதிரடி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டுவரும் தமிழக அரசு, இப்போதும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
கொரோனா தொற்று காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் அளவுக்கு அதிகமான இன்னல்களுக்கு ஆளானார்கள்.. இதையடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், அவர்களை பாதுகாக்கவும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
அதேபோல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் சுப்ரீம்கோர்ட் வரை விவகாரம் சென்றது.. கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம்கோர்ட் சில முக்கிய உத்தரவுகளை வெளியிட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட்: அந்த உத்தரவில், "இ-ஷ்ரம் இணையத்தில் பதிவு செய்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். விடுபட்டவர்களுக்கு அடுத்த 3 மாதங்களில் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசஅரசுகள் ரேஷன் அட்டைகளை வழங்க வேண்டும். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உத்தரவிட வேண்டும்.
ரேஷன் அட்டை மூலம் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து சலுகைகளும் புலம்பெயர் தொழிலாளர்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட பலன்களும் அவர்களை சென்றடைய வேண்டும்" என்று உத்தரவிட்டது.
ரேஷன் அட்டைகள்: இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளருக்கு ரேஷன் கார்டுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. அசாம், பீஹார், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வந்தவண்ணம் உள்ளனர்..
தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.. இவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டு வழங்க, புலம்பெயர் தொழிலாளரிடம் விண்ணப்பம் பெறலாம்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கலாம்: இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்லும்போது, இ - ஷ்ரம் வெப்சைட்டில், தொழிலாளர் பெயர், தொழில், முகவரி, கல்வித்தகுதி, திறன் போன்ற விவரங்கள் ஆதாருடன் இணைக்கப்படுகின்றன. இ-ஷ்ரம் வெப்சைட்டில் பதிவு செய்த, தகுதியான புலம்பெயர் தொழிலாளருக்கு க்கு, ரேஷன் கார்டு வழங்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
இதில், பணி நிமித்தமாக நிரந்தரமாக தமிழகத்தில் குடியேறியவர்கள் மற்றும் தற்காலிகமாக குடிபெயர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை, குடும்பம் சொந்த மாநிலத்திலிருக்கும்போது, தொழிலாளர் மட்டும் தமிழகத்தில் இருந்தாலும், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நெகிழும் தொழிலாளர்கள்: அந்த விண்ணப்பம், சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்பி சரிபார்த்து பரிசீலிக்கப்படும்... குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினர், வெளிமாநில மக்களின் விண்ணப்பங்களை ஏற்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது" என்றனர். தமிழக அரசின் இந்த உத்தரவானது, புலம்பெயர் தொழிலாளர்களின் வயிற்றில் பாலை வார்த்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications