சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை குடிநீர் பஞ்சத்தை போக்க வந்தது புதிய திட்டம்.. அமைகிறது நீர் குழுமம்.. ஓபிஎஸ் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகரில் உள்ள நீர்வளங்களை திட்டமிட்டு நீர் பாதுகாப்பை மேம்படுத்த ஏதுவாக புதிதாக நீர்க் குழுமம் தொடங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக உலக வங்கியின் துணையுடன் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன்படி, பொது சுகாதாரம், போக்குவரத்து மற்றும் குடிநீர் ஆகியவற்றில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

New water board will be set up for Chennai, says O.Pannerselvam in budget

சென்னை நகரின் நீர்வளங்களை திட்டமிட்டு நீர்ப் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நீர்க் குழுமம் உருவாக்கப்படும் என்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில் 2019ம் ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசு சென்னையின் நீர் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நீர்க் குழுமம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

English summary
The Deputy Chief Minister O.Panneerselvam said that a new water board will be set up to plan the water resources in the city of Chennai and improve water security.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X