புத்தாண்டு கொண்டாட்டம் 2024.. மெரினா, ஈசிஆர் பக்கம் போறீங்களா.. போலீஸாரின் ரூல்ஸ் இதுதான்
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மெரினா கடற்கரையில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கு பை பை சொல்ல இன்னும் 5 நாட்களே இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகிவிட்டனர். இந்த 2023 இல் பிரபலங்கள் இறப்பு, புயல், மழை, வெள்ளம் உள்ளிட்டவைகளால் கவலையில் உள்ள மக்களுக்கு 2024 ஆம் ஆண்டாவது நற்பலன்களை கொடுக்கும் என நம்புகிறார்கள்.

இந்த நிலையில் புத்தாண்டை எல்லா இடங்களிலு் சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
இதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதன் படி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் செய்து வருகிறார்கள். சென்னையில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 20 ஆயிரம் போலீஸார் முக்கிய சாலைகளில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் இருப்பார்கள்.
சென்னை மெரினா, பெசன்ட் நகர், உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதிலும் போலீஸார் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் 31 ஆம் தேதி அன்று இரவு பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக புறக் காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. சிறுவர், சிறுமிகள் கூட்டத்தில் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க கைகளில் அடையாள வளையம் (tag) கட்டிவிடப்படுகிறது.
இதில் பெற்றோர்களின் செல்போன் எண், போலீஸாரின் எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் காணாமல் போகும் குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்கலாம். சென்னை மாநகரில் 400 இடங்களில் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபடுகிறார்கள். ஈசிஆர் சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸாரை நியமித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீஸார் ரேஸை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மது போதையில் வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்துபவர்களை பிடிக்க சென்னை முழுவதும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படவுள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர் டிரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications