எனக்கும் இன்று தான் பிறந்தநாள்... கமலுக்கு நியூஜெர்சி கிண்டர்கார்டன் குழந்தையின் அன்புக் கடிதம்!
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்று கமல்ஹாசன் கூறிவிட்டதால் ரசிகர்கள் நற்பணி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கமல்ஹாசனுக்கு நியூஜெர்சியை சேர்ந்த கிண்டர்கார்டன் குழந்தை ஒன்று அன்புக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
களத்தூர் கண்ணம்மாவில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி விஸ்வரூபம் 2 வரை தொடர்ந்து பயணித்து வரும் உலக மக்களின் நாயகனாக அழைக்கப்படும் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எதிலும் எளிமை சிந்தனையில் பரந்துபட்ட பார்வையை வைத்துள்ள கமல் மக்கள் பணியாற்றுவதற்காக அரசியலில் இறங்கியுள்ளார்.
வழக்கமாகவே ரசிகர் மன்றங்கள் தன்னுடைய பிறந்தநாளை விழாவாக கொண்டாடாமல் நற்பணிகளை செய்யும் விதமாக தொடர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார் கமல். இந்நிலையில் இந்த ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாட வேண்டாம் என்று முன்கூட்டியே அறிவுறுத்தி இருந்தார் கமல்ஹாசன்.
[சர்கார் பட பேனரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்.. தூக்கில் தொங்கியதால் பரபரப்பு ]

கேக் வெட்ட வேண்டாம்
பிறந்தநாள் கொண்டாட்டங்களை கேக் வெட்டி மகிழ்வது என்று செலவிடாமல் ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு உதவும் பணிகளை செய்ய வேண்டும். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு முடிந்த உதவியை செய்யுங்கள் என்று கூறி இருந்தார்.

உடல் உறுப்பு தான விழிப்புணர்வு
மேலும் நீர்நிலைகளை சுத்தம் செய்வது, அந்தப் பகுதிகளில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வைத் தரும் செயல்களை செய்வது உள்ளிட்டவற்றை செய்யலாம் என்ற கமல் அறிவுறுத்தி இருந்தார். இதனிடையே நேற்றைய தினம் கமல் உடல் உறுப்பு தானம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பிறர் வாழ உதவலாம்
தாயாய் மாறும் தருணமிது என்று உடல் உறுப்பு தானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கவிதை ஒன்றை கமல்ஹாசன் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தை முன்னெடுத்து வரும் கமல் ஏற்கனவே தனது உடலை தானம் செய்துவிட்டார். மண்ணுக்கு போய் மக்கிப்போகும் உறுப்புகளை நம் இறப்பிற்கு பிறகு பிறர் பயன்படுத்த கொடுக்கலாமே என்பது தான் அவர் பரப்பும் நல்ல விஷயம்.
|
அழகான கடிதம்
கமல்ஹாசனின் பிறந்தநாளை ரசிகர்கள் அவர் சொன்ன விதத்திலேயே கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நியூஜெர்சியை சேர்ந்த கிண்டர்கார்டன் செல்லும் குழந்தை ஒன்று கமலுக்கு அழகு நடையில் ஒரு அன்புக் கடிதத்தை அனுப்பியுள்ளது. மயூரி என்ற அந்தக் குழந்தை எழுதியுள்ள கடிதத்தில்,கமல் அங்கிள் நீங்க எப்படி இருக்கீங்க, நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில தொடர்ந்து உங்களை பார்ப்பேன். எனக்கு நவம்பர் 7ம் தேதி பிறந்தநாள் உங்களுக்கும் அன்று தான் பிறந்தநாள் என்று என்னடைய அப்பா சொன்னார். உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஐ லவ் யூ
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். உங்களது 'பம் சிக்கு பம் சிக்கு' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஐ ல்வ யூ. இப்படிக்கு மயூரி சுந்தர் ராமன், கிண்டர்கார்டன் என்று அந்தக் குழந்தை எழுதியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications