சர்கார் பட பேனரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்.. தூக்கில் தொங்கியதால் பரபரப்பு
சர்க்கார் படபேனர் கிழித்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
Recommended Video

வேலூர்: சர்க்கார் பட பேனரை கிழித்த இளைஞர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய விவகாரம் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலரையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
காவேரிப்பாக்கம் ஈராளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், சென்னையில் கால்டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தீபாவளிக்கு லீவு என்பதால் தனது ஊருக்கு வந்தார். அப்போது சர்க்கார் படம் நேற்று வெளியானதால், விஜய் ரசிகர்கள் ஊரெங்கும் படத்தின் பேனர்களை வைத்திருந்தார்கள்.

பேனர் கிழிப்பு
அதில் ஒரு பேனர் மணிகண்டன் வீட்டின் அருகிலேயே வைத்திருந்தார்கள். பண்டிகை என்பதால் நேற்று மணிகண்டன் தண்ணி அடித்துள்ளார். மதுபோதையில் வீட்டு அருகில் இருந்த பேனரை மணிகண்டன் கிழித்துவிட்டதாக தெரிகிறது. இதை பார்த்ததும் விஜய் ரசிகர்களுக்கு கோபம் வந்துவிட்டது. எப்படி நாங்கள் வைத்தத பேனரை கிழிக்கலாம் என்று மணிகண்டனிடம் 10-க்கும் மேற்பட்டோர் சண்டைக்கு போயுள்ளனர். மேலும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்த மணிகண்டனை தாக்கியும் உள்ளனர்.

கதவை திறங்க
இப்படி ஒரு நபரை ஒரு கும்பலே சேர்ந்து கொண்டு அடிப்பதை பார்த்த மணிகண்டனின் சொந்தக்காரர்கள் மீட்டு உறவினர் ஒருவரின் வீட்டுக்குள் தள்ளி கதவையும் வெளிப்பக்கமாக தாளிட்டு வந்துவிட்டனர். ஆனால் வீட்டுக்குள் சென்ற மணிகண்டனோ எல்லோரும் தன்னை சேர்ந்து தாக்கிய வலியிலும், ஆத்திரத்திலும், கத்தினார். "கதவை திறங்க.. என்னை அடிச்சவங்களை நான் சும்மா விட மாட்டேன்.. என்னை ஏன் உள்ள வச்சி தாழ்ப்பாள் போடறீங்க?" என்று உள்ளிருந்து கொண்டே கூச்சல் போட்டார்.

தூக்கில் தொங்கினார்
ஆனால் நிலைமையை உணர்ந்த சொந்தக்காரர்கள், எப்படியும் வெளியில் வந்தால் பிரச்சனை பெரிசாகிவிடும் என்று நினைத்து கதவை திறக்கவே இல்லை. இதனிடையே பேனர் கிழித்து தகராறு ஏற்பட்ட சம்பவம் ஊரெங்கும் பரவிவிட்டது. அதனால் விஜய் ரசிகர்கள் எல்லோரும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார்கள். கொஞ்ச நேரம் கழித்து கதவை திறந்து உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தால் மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

போலீசில் புகார்
இதை பார்த்ததும் உறவினர்கள் அவரை கட்டிக் கொண்டு கதறி அழுதனர். இதுகுறித்த தகவல்உடனடியாக காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களும் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் உறவினர்களோ, மணிகண்டனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து புகாரும் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையிலும் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

7 பேர் மீது வழக்கு பதிவு
எல்லோரும் ஒன்றுகூடி அடித்து அவமானம் தாங்காமல் மணிகண்டன் தற்கொலை செய்து இறந்துபோனாரா? அல்லது தாழ்ப்பாளர் போடப்பட்ட கதவை திறந்து யாரேனும் அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்தெல்லாம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்க்கார் பட பேனரை கிழிக்க போய்.. தற்போது மரணம் வரை கொண்டுவந்து விட்டுவிட்ட இந்த சம்பவம் மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications